‘சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவின் மாய வித்தை வேலை செய்யாமல் போகலாம்’

samyஉங்கள் கருத்து : “சாமிவேலு-விடம் மாய வித்தை ஏதுமில்லை; மாய வித்தைக்காரன் என்ற முறையில் பல மில்லியன் ரிங்கிட்டைக் காணாமல் போகச் செய்வதே அவருக்கு உள்ள ஒரே திறமை”

சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவின் ‘மாய வித்தை’ வேலை செய்யாமல் போகலாம்

ராஜா சூலான்: பிரச்சாரத்தின் போது முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு-வை உடன் வைத்துக் கொண்டால் பல வாக்குகளைத் தாம் இழக்க நேரிடும் என்பது பிஎன் சுங்கை சிப்புட் வேட்பாளர் எஸ்கே தேவமணிக்கு நன்றாகத் தெரியும்.

தேவமணி தாமாகவே வெற்றி பெற்று விட்டால் சாமிவேலுக்கு பாதகமான தோற்றம் ஏற்படும். தமது எஜமானரே முன்பு தோற்றுப் போன இடத்தில் தேவமணி எப்படி வெற்றி பெற முடியும் ?

அதனால் சாமிவேலு கெட்டிக்காரத்தனமாக தமக்கு வெற்றி-வெற்றியைத் தரக்கூடிய ஒரு வியூகத்தை வகுத்தார். அதாவது பிஎன் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் அதில் சம்பந்தப்படுவது.

தேவமணி வெற்றி பெற்றால் அதற்குத் தாம் காரணம் என அவர் கூறிக் கொள்ளலாம். அந்தத் தொகுதியை ஏற்கனவே தாம் பிஎஸ்எம்-ன் டி ஜெயகுமாரிடம் இழந்ததற்கு பழி வாங்கி விட்டதாகவும் அவர் கருதலாம். தேவமணி தோல்வி கண்டால் தாம் வெற்றி பெறக் கூடிய வேட்பாளராக இருந்ததாகச் சொல்லிக் கொள்ளலம்.

எந்த வழியிலும் அவருடைய தற்பெருமைக்கு மனநிறைவு ஏற்படும். தமது முன்னாள் மதியுரையாளர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைப் போன்று சாமிவேலுவும் மிகவும் சூட்சுமப் புத்தியுள்ள அரசியல்வாதி. நடப்பு மஇகா தலைவர் ஜி பழனிவேலுக்கு பெரிய அளவில் தலைவலி தொடங்கப் போவதை என்னால் உணர முடிகிறது.

ஜேம்ஸ் பாண்ட் 007: சாமிவேலு-விடம் மாய வித்தை ஏதுமில்லை. மாய வித்தைக்காரன் என்ற முறையில் பல மில்லியன் ரிங்கிட்டைக் காணாமல் போகச் செய்வதே அவருக்கு உள்ள ஒரே திறமை.

எஸ்எஸ் டாலிவால்: சின்னச் சின்ன தேவைகளுக்குக் கூட சுங்கை சிப்புட் மக்கள் அரசியல்வாதிகளிடம் ஒடுவதாகத் தெரிகிறது. உங்களுக்குக் கடன் வேண்டும் என்றால் வங்கிக்குச் செல்லுங்கள். உங்கள் கை முறிந்து போனால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

உங்கள் குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பது எம்பி-யின் வேலை அல்ல. நீங்கள் மனச்சாட்சிக்கு இணங்க வாக்களிக்க வேண்டும். பிஎன் உண்மையில் தார்மீகப் பண்புகளைக் கொண்ட கட்சியா ? அது ஊழல் கட்சி இல்லையா ? அது ஏன் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தவில்லை ? அது தனது இனவாதக் கொள்கைகளைக் கைவிடுமா ? அது உங்களுக்கு இலவசக் கல்வியை வழங்குமா ? அவர்கள் பெட்ரோல் விலைகளைக் குறைப்பார்களா ?

சுங்கை சிப்புட் மக்கள் உட்பட ஒவ்வொருவரும் அந்தக் கேள்விகளைத் தான் கேட்க வேண்டும். அவற்றுக்கான பதில் இல்லை என்பது தான். ஏனெனில் அதன் 55 ஆண்டு கால ஆட்சியில் நாம் அதனைப் பார்த்து விட்டோம்.

சுங்கை சிப்புட் மக்கள் எளிய சிந்தனைகளைக் கொண்ட மக்களாக இருக்கக் கூடாது. இந்த முறை தனிப்பட்ட நபருக்கு வாக்களிக்க வேண்டாம். கட்சிக்கு நிச்சயம் பக்காத்தானுக்கு வாக்களியுங்கள்.

பேஸ்: எம்பி-க்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய அன்றாடப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக உள்ளனர் என்ற எண்ணத்தில் மலேசியர்கள் இன்னும் ஊறிப் போயிருந்தால் நாம் அம்னோ/பிஎன் கரங்களில் தான் விழ வேண்டும். இல்லை என்றால் நாம் அந்த புதைகுழியிலிருந்து ஒரு போதும் வெளியேறவே முடியாது.

ரொக்க வெகுமதிகள் போன்ற “சேவைகளுக்கு” முதலிடம் கொடுத்தால் பிரச்சாரத்தின் போது வாக்களர்களுக்கு பிச்சை போடு கலையை அம்னோ/பிஎன் தெளிவாக அறிந்துள்ளது எனக் கூறலாம். அவை அரசாங்கத்தில் இருக்கும் போது வாக்காளர்களுக்கு பின்னால் தங்களுக்கும் தங்கள் சேவகர்களுக்கும் மில்லியன் கணக்கில் திருடிக் கொள்ளும்.

எளிய சிந்தனை கொண்ட மக்களுக்கு நாம் அரசியல் சிந்தனைகளை ஏற்படுத்தா விட்டால் அம்னோ/பிஎன் அவர்களை கூடிய வரை ஏதும் அறியாதவர்களாகவே வைத்திருக்கும்.

வோங் லு சின்: மலேசியாகினி செய்தியில் பேட்டி காணப்பட்டுள்ள மக்களுடைய எண்ணங்கள் எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன. அவர்கள் அரசியல்வாதிகள் வெகுமதிகளை வழங்குவதில் மட்டும் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. தேசியப் பொருளாதாரம், வேலை வாய்ப்புக்கள், கல்வி, பொதுச் சேவைகள் பற்றி கவலை கொள்வதாகவே தெரியவில்லை.

திறந்த மனம்: மஇகா தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. அதிசயம் நிகழும் என அது நம்புகின்றது. அதன் சரிவுக்கும் இறுதி அஸ்தமனத்துக்கும் அதுவே காரணம். சாமிவேலு அவர்களே, கீழே தண்ணீர் ஒடாத போது மீண்டும் பாலம் கட்ட முயல வேண்டாம்.

 

TAGS: