உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஒதுக்கித்தள்ளினார். சரியான நேரத்தில்தான் விலகப்போவதாக அவர் சொன்னார்.
“இவர்கள் கட்சிமீதுள்ள பாசத்தால் அவ்வாறு கோரிக்கை விடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெரும்பாலானோர் நான் தொடர்ந்து இருப்பதை விரும்புகிறார்கள்.
“இது பற்றி விவாதித்தோம். கட்சி உறுப்பினர்களுக்கும் இது தெரியும். நிலைமை சரியான பின்னர், ஒரு பொருத்தமான நேரத்தில் நான் விலகுவேன்”.
இன்று தலைமை மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுவா இவ்வாறு கூறினார்.
எப்படி எல்லாம் பல்டி அடிக்கிரானுங்க்கடா சாமி
ஒரு வேளை ம.சீ.ச. உறுப்பினர் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் வரை அவர் தலைவராக இருப்பார். ஆனால் ம.இ.கா. தலைவர்கள் உயிரே போனாலும் நாற்காலியை விட்டு கொடுக்க மாட்டார்கள். நமது முன்னால் தலைவர் 2008 இல் தோற்றுப்போனதால் பதவியை விட்டு விலகினார். இல்லை என்றல் அவர் தான் இன்னும் தலைவராக இருப்பார்.பதவி ஆசை யாரை விட்டது.