‘அம்னோ தீவிரவாதிகள் கட்டுப்பாடு இல்லாமல் பேசுகின்றனர் ஆனால் சமரசம் நஜிப் பாணி’

voteஉங்கள் கருத்து : “அந்த முன்னாள் நீதிபதி விடுத்த அறிக்கை மீது பிரதமர் தமது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன்  அந்த மனிதர் அம்னோ ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திலும் அங்கம் பெற்றுள்ளார்”

“துரோகத்திற்கு” பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் நீதிபதி சீனர்களை எச்சரிக்கிறார்

2 டிம் 1:7: மக்களில் 53 விழுக்காட்டினர் நிராகரித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களுடைய அரசாங்கம்  தேசிய சமரசம் எனத் தான் சொல்லிக் கொள்வதை ஏற்படுத்துவதற்கு மலிவான ‘கம்போங்’ தந்திரத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

அம்னோவில் உள்ள தீவிரவாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் சீன, இந்திய வம்சாவளி பிரஜைகள் பற்றி  இனவாதமான தூண்டி விடும் அறிக்கைகளை வெளியிட நஜிப் அனுமதிக்கிறார். அவர்கள் தாங்கள் விரும்புவதைச் சொல்லி முடித்ததும் எல்லா மலேசியர்களுக்கும் தலைவராக தாம் இருக்க விரும்புவதாக நஜிப்  சாதாரண அறிக்கையை வெளியிடுவார்.

அந்த அம்னோ ஜமீன்தார்கள் ஏன் இப்படி ‘கிறுக்கு’ பிடித்து அலைகின்றனர் ? நண்பர்களுக்கு உதவுவது,
இலவசமாகப் பெறுவது ஆகியவற்றுக்கான நாட்கள் எண்ணப்படுவது குறித்து அவர்கள் அச்சமடைந்துள்ளனரா  ? கஷ்டப்பட்டு வேலை செய்து அவர்களுக்குப் பழக்கமில்லை என்பதால் அந்த சூழ்நிலை அவர்களுக்கு  மிகவும் கவலை அளிக்கிறது.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: முகமட் நூர் நீதிபதியாக இருந்த போது நீதிமன்றத்தில் அவருக்கு முன்னால் மலாய்க்காரர்  அல்லாதார் ஆஜரான போது அவர் வழங்கியிருக்கக் கூடிய தீர்ப்புக்களை நினைத்துப் பார்க்கவே எனக்கு  அச்சமாக இருக்கிறது.

சீனர்களிடம் பொருளாதார வலிமை இருந்தாலும் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்வது அவரது வேலையல்ல. அவர்கள் பிஎன் -னை தேர்வு செய்யாததால் அவர்களை எப்படி நன்றி கெட்டவர்கள் எனச் சொல்ல முடியும் ?

எல்லோரும் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதால் ஏன் நாம் எல்லா எதிர்காலத் தேர்தல்களையும் ரத்துச் செய்து விடலாமே ? யாருக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அடையாளம் இல்லாதவன் #06188481: முகமட் நூரை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நானும்  என் மனைவியும் சீனர்கள். கிறிஸ்துவர்கள். என் மனைவி ஷா அலாமில் காலித் சமாட்டுக்கு வாக்களித்தார்.  நான் கோத்தா ராஜாவில் சித்தி மரியா மாஹ்முட்-டுக்கு ஒட்டுப் போட்டேன். அவர்கள் இருவரும்  மலாய்க்காரர்கள். முஸ்லிம்கள். இருவரும் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தயவு செய்து சொல்லுங்கள். நான் இனவாதி என எப்படிச் சொல்ல முடியும் ? நான் யாருக்குத் துரோகம்
செய்தேன் ? யாராவது எனக்கு விளக்கமளிப்பார்களா ?

நாங்கள் பல பொதுத் தேர்தல்களில் மசீச-வுக்கும் அம்னோவுக்கும் வாக்களித்துள்ளோம். இப்போது அது எங்களுக்கு நியாயமாகப்படவில்லை. அரசியல் கட்சிகள் வரும் போகும். என் விசுவாசம் அரசியல் கட்சிகளுக்கு அல்ல. கூட்டரசு அரசமைப்புக்குத் தான் என் விசுவாசம்.

கலா: ஆளும் கூட்டணியின் அதிகார அத்துமீறல், ஊழல் ஆகியவற்றை மறைப்பதற்கு முகமட் நூர்
இனத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்துகிறார். தார்மீக நெறியில்லாத அந்த நடவடிக்கைகளை மக்கள் உணருவது திண்ணம். அவர் எவ்வளவு சொன்னாலும் உண்மை மறையாது.

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்குப் பதிலாக நியமிக்கப்படுவதற்கு அந்த முன்னாள் முறையீட்டு மன்ற நீதிபதி பொருத்தமான வேட்பாளர். முகமட் நூரும் இப்ராஹிம் அலியைப் போன்று பொருத்தமற்ற, நியாயமற்ற  இனவாத சிந்தனைகளைக் கொண்டவர்.

இத்தகைய சிந்தனைகளைக் கொண்டவர்களுடன் நஜிப் எப்படி தேசிய சமரசத்தைக் கொண்டு வரப் போகிறார் ?

டிபிள்ளை: இந்த நேரத்தில் இந்த கால கட்டத்தில் முகமட் நூர் அத்தகைய கருத்துக்களை முகமட் நூர்
வெளியிட்டது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

அந்த முன்னாள் நீதிபதி விடுத்த அறிக்கை மீது பிரதமர் தமது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன்  அந்த மனிதர் அம்னோ ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திலும் அங்கம் பெற்றுள்ளார்.

சீ ஹோ சியூ: அம்னோ சம்பளப் பட்டியலில் உள்ள இன்னொருவர் 513 (மே 13) பற்றிப் பேசி தூண்டி விட
முயலுகிறார். அவர் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்பட வெண்டும். அவரைப் போன்ற மக்கள் இல்லாவிட்டால் மலேசியா நன்றாக இருக்கும்.

மாற்றம்: சீனர்களை பூச்சாண்டியாக காட்டுவது தொடருகின்றது. ஊழல் மலிந்த திறமை இல்லாத பிஎன் ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மறுத்ததின் மூலம் சீன சமூகம் யாருக்குத் துரோகம் செய்து விட்டது ?

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்கள் திட்டமிடுகின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் ? சீன சமூகம் மசீச-வையும் கெராக்கானையும் நிராகரித்ததிலிருந்து அது அரசியல் அதிகாரத்தை விரும்பவில்லை என்பது தெரியவில்லையா ? பிஎன் கூட்டணியில் டிஏபி சேரக் கூடாது என்றும் அந்த சமூகம் வலியுறுத்தியுள்ளது.

முகமட் நூர் அறிக்கை தவறானது, தேச நிந்தனையானது. மலாய்க்காரர்களுடன் நட்புறவை சீனர்கள்
நிராகரித்தது இல்லை. பிஎன் பின்பற்றும் இன அடிப்படைக் கொள்கைகள், தவறான நிர்வாகம், ஊழல்
ஆகியவற்றையே அவர்கள் எதிர்க்கின்றனர்.

TAGS: