மலேசியாவில் அண்மைக்காலமாக “சட்டவிரோத” தெரு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அதனால் சுற்றுலா தொழில் பாதிக்கப்படவில்லை என்கிறார் புதிய சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.
“சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, சுற்றுலா வருமானமும் கூடி வருகிறது. எனவே, அதனால் பாதிப்பு இல்லை என்றே நினைக்கிறேன்”, என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் நஸ்ரி தெரிவித்தார்.
சுற்றுலா புள்ளிவிவரங்கள், தெரு ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலா தொழிலுக்குப் பாதிப்பு இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
“ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. 2003-ஐ தவிர மற்ற ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை ஏறுமுகமாகத்தான் இருந்துள்ளது. அந்த ஆண்டில் சார்ஸ் நோய், உலகப் பொருளாதாரச் சுணக்கம் போன்ற காரணங்களால் எண்ணிக்கை குறைந்தது.
“2008-இலிருந்து இதுவரை எத்தனையோ சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையோ சுற்றுலா துறை வருமானமோ குறையவில்லை”, என்றாரவர்.
நாங்கள் நாகரீகமாக எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் அமைச்சர் அவர்களே ! போலீஸ்தான் எங்கள் மீது சட்ட விரோதமாக நடந்து கொள்கிறது ! தேவை இல்லாமல் கண்ணீர் புகை குண்டு போடுவது , வேதியல் நீர் பாச்சி அடிப்பது ,மக்கள் வரி பணத்தை ஏன் வீண் செய்கிறீர் ?
நஸ்ரி, இங்கே யாரும் தெரு ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை. நாங்கள் நடத்துவது அரசியல் (விழிப்புணர்வு) பேரணிகள்.
மிகவும் திட்டவட்டமாக அமைச்சரே கூறியபிறகு ஏன் பரிசான் அரசாங்கம் பயப்படுகிறது என்பது தெரியவில்லை ! மாறாக நடந்தேறிய தேர்தல் முடிவுகளை மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூடங்களுக்கு போலீஸ் அனுமதி கொடுக்க வேண்டியது அவர்தம் கடமையாகும் அல்லவா… யோசனையும் முடிவெடுப்பதற்கு துணிச்சல் இல்லையெனின் சுற்றுலா அமைச்சர் முகம்மது நஸ்ரி பின் அப்துல் அஜிஸ் உதவியை நாடும் .தக்க பதில் கிடைக்கும் !
நஸ்ரி தெரியாமல் இது போன்ற அறிக்கையை விட்டு விட்டார்! மிக விரைவில் அம்னோ/உத்துசான் மலேசிய இவரை மலாய்க்காரர்களின் எதிரி என்று முத்திரைக் குத்தப்போகிறார்கள்!