கர்பால்: செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

1 karpalமேலவை உறுப்பினர்களும் (செனட்டர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்கிறார் டிஏபி தலைவர் கர்பால் சிங்.

இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர கர்பால் ஆலோசிக்கிறார்.

இப்போது மாநில அரசாங்கள் செனட்டர்களை நியமனம் செய்கின்றன.

“அவர்கள் மாநில வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இனி, நியமனங்களே இருக்கக் கூடாது.

1 karpal 1“பிஎன் முடியாது என்று சொன்னாலும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கத் தயார். ஆனால், அதற்கு வகைசெய்யும் சட்டத்திருத்தம் ஒன்றை முதலில் நாடாளுமன்றம் செய்ய வேண்டும்.

“பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களும் செனட்டர்களை நியமனம் செய்கின்றன. அதையும் நிறுத்த வேண்டும்”, என கர்பால் இன்று பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

“மக்களின் ஆதரவு இல்லாதவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியாயமல்ல.

“இது அரசமைப்பை அவமதிப்பதாகாது.”

‘அரசமைப்புக்கு எதிரானதல்ல’

கடந்த வாரம், கர்பால் செனட் அவையால் பயனில்லை என்பதால் அது தேவையில்லை என்று கூறப்போக அது சர்ச்சையை உண்டுபண்ணியது.

1 karpal 2அந்த புக்கிட் குளுகோர் எம்பி, அரசமைப்பை அவமதிக்கிறார் என்று செனட் தலைவர் அபு ஸ்ஹார் ஊஜாங் (வலம்) குறைகூறினார்.

அதை மறுத்த கர்பால், தாம் சட்டத்திருத்தத்தைதான் கோருவதாகக் கூறினார்.

அது அரசமைப்பை அவமதிப்பது ஆகாது. “பிஎன் எத்தனையோ தடவை அரசமைப்பில் திருத்தம் செய்துள்ளது. எனவே, நான் சொல்வது எப்படி அவமதிப்பதாகும்?”, என்றவர் வினவினார்.

“செனட் தலைவர் எனக்குச் சட்டம் படித்துத் தர வேண்டாம். அவர் நியமிக்கப்பட்டவர்தான். நான் பெரிய பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

“அவர் எனக்கு உபதேசம் செய்ய வேண்டாம். செனட்டர்களில் சிலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்”.

கர்பால்  இண்ட்ராப் தலைவர்  பி.வேதமூர்த்தியைச்  சுட்டிக்காட்டினார்.  அவரைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரதமர்துறையில் துணை அமைச்சராக நியமனம் செய்தார்.

“அவர் எப்ப டி செனட்டுக்குள் புகுந்தார் என்பது எனக்கு விளங்கவில்லை.  அவர் இந்தியர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர். சொந்த சகோதரராலேயே பழித்துரைக்கப்பட்டவர்”, என்று கர்பால் குறிப்பிட்டார்.

 

 

 

TAGS: