ஆர்ஒஎஸ் இயக்குநர் ‘பொய்யர்’ என டிஏபி வருணனை

lokeகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்கள் மீதான தனது விசாரணைகள்  தொடர்பில் கட்சிக்கு எதிராக ‘விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை’ அடுக்கும் ‘பொய்யர்’ என டிஏபி  ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலக இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானை  வருணித்துள்ளது.

விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்னரே அந்தப் பேரவையின் போது சில டிஏபி  உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிடுவதின் மூலம் அப்துல்  ரஹ்மான் ‘தொழில் முறைக்கு மாறாக’ நடந்து கொள்வதாக டிஏபி கட்சியின் அமைப்புச் செயலாளர்  அந்தோனி லோக் கூறினார்.

எல்லா கட்சிப் பேராளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டுமாறு
கோரும் கடிதம் ஒன்று நேற்று ஆர்ஒஎஸ்-ஸிடமிருந்து கட்சிக்குக் கிடைத்ததாக அவர் சொன்னார்.
தங்களுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என நான்கு கிளைகள் புகார் செய்துள்ளதாகவும் அந்தக்
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர் (அப்துல் ரஹ்மான்) ஆர்ஒஎஸ் இயக்குநராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல. அவர் பொய்யர்
மட்டுமல்ல, அம்னோ, பிஎன் கருவியும் ஆவார்,” என வலியுறுத்திய அவர், டிஏபி-க்கு எதிரான
விசாரணையில் டிஏபி ‘கோல் கம்பங்களை’ மாற்றத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.loke1

“தொடக்கத்தில் அவர்கள் நாங்கள் தேர்தல் முடிவுகளை தொழில்நுட்பக் குளறுபடி காரணமாக பின்னர்  மாற்றியது பற்றி விசாரித்தனர். எங்களுக்கு எதிராக எதனையும் நிரூபிக்க முடியாததால் அவர்கள்  இப்போது கோல் கம்பங்களை மாற்றிக் கொண்டு நாங்கள் பேராளர்களுக்கு வாக்களிக்க உரிமை  கொடுக்கவில்லை எனக் கூறிக் கொள்கின்றனர்,” என்றார் அவர்.

தங்களுக்குக் கட்சியிடமிருந்து நோட்டீஸ் கிடைக்கவில்லை என 700 டிஏபி உறுப்பினர்கள் புகார்  செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எல்லா கிளைகளுக்கும் நோட்டீஸ் கிடைத்ததற்கு கட்சி  உத்தரவாதம் அளிக்க முடியாது என லோக் வலியுறுத்தினார்.