இரண்டு சகோதரர்கள், ஒரே போராட்டம், வெவ்வேறான தலைவிதிகள்!

brothersஉங்கள் கருத்து : “பிரதமர் நஜிப் அந்த இரு சகோதரர்களையும் கட்டுக்குள் வைத்து விட்டதாகவே தோன்றுகின்றது.  ஒருவர் சிறைச்சாலையில், இன்னொருவர் அவரது அலுவலகத்தில்”

“உதயா எதிர்வாதம் செய்ய மறுத்தார்”

ஹோல்டன்: ஹிண்ட்ராப்பைத் தோற்றுவித்த பி உதயகுமார் 2007ம் ஆண்டு நாட்டின் மனச் சாட்சியை  தட்டி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து ஒடுக்கினால் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஒர்  அடையாளச் சின்னத்தை நீங்கள் உருவாக்கி விடுவீர்கள்.

தெரிவு செய்து வழக்குப் போடுவது மீண்டும் அப்பட்டமாகியுள்ளது. பெர்க்காசாவின் இப்ராஹிம் அலி, சுல்கிப்லி நூர்டின், உத்துசான் மலேசியா ஆகியோர் மீது என்ன குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ?

அரசியல் சார்பற்ற பார்வையாளர்: உதயாவின் முடிவு தமது சகோதரர் இழைத்த துரோகத்திற்கு
தண்டனை என்றே சொல்ல வேண்டும். பி வேதமூர்த்தி பிஎன் அரசாங்கத்திலிருந்து விலகி உதயாவுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.

பிரதமர் நஜிப் அந்த இரு சகோதரர்களையும் கட்டுக்குள் வைத்து விட்டதாகவே தோன்றுகின்றது. ஒருவர் சிறைச்சாலையில், இன்னொருவர் அவரது அலுவலகத்தில்.

உதயாவின் குரல் இனி சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே முடங்கி விடும். அதே
வேளையில் வேதா பிரதமர் அலுவலகத்தின் சொகுசான சூழ்நிலையில் தேனீ கொட்டியதால் வாய் பேச முடியாமல் அமைதியாக துயரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பார்வையாளன்: டிபிபி நூர்டின் இவ்வாறு சொல்கிறார்: ‘இன ஒழிப்பு’, ‘சிறிய இன அழிப்பு’,
‘ஆயுதமேந்திய பயங்கரவாதிகள்’, ‘இஸ்லாமியத் தீவிரவாதிகள்’ போன்றவை, அனைத்துலக அளவில் கொடூரமான குற்றங்களையும் கொடுமையான இன ஒடுக்குமுறையையும் அனைத்துலக அளவில் சித்தரிக்கும் சொற்களாகும்.”

அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கம் உள்நாட்டில் பிறந்த நூறாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு குடியுரிமையை மறுத்துள்ளது. வாழ்வாதரத்திற்கான வழி மறுக்கப்பட்டது என்பதே அதற்கு அர்த்தமாகும்.

விரக்தி அடைந்த பல இந்தியர்கள் உயிர் வாழ்வதற்கு ஒரே வழியான -குற்றச்செயல்களில் இறங்கி
விட்டனர். பின்னர் போலீசார் அவர்களை போலியான நடவடிக்கைகள் மூலம் அல்லது தடுப்புக் காவலில் இருக்கும் போது கொன்று விடுவார்கள்.

அதற்கு நேர்மாறாக அரசாங்கம் இந்தோனிசியா, பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகியவற்றைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு  திடீர் குடியுரிமைகளை வழங்கி அவர்கள் பூமிபுத்ராக்களாக மாற்றுகின்றது. அவர்களுக்கு வேலை  வாய்ப்புக்களும் சிறப்புச் சலுகைகளும் கிடைக்கின்றன.

கம்போங் மேடானில் இந்தியர்களைக் கொன்ற யாரும் இது வரை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை ? அம்னோ இந்தியர்களை வேண்டுமென்றே கொன்றதையும் அதன் இனவாதத்தையும் சமயத் தீவிரவாதத்தையும் உதயா அம்பலப்படுத்தியதால் அம்னோ உதயா மீது வழக்குப் போட்டது.

ஜெரார்ட் லூர்துசாமி: உதயகுமார் நீங்கள் செய்தது நல்ல நடவடிக்கை. தேச நிந்தனைச் சட்டம்
கேலிக்கூத்து. பேச்சு சுதந்திரத்தையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் அந்த
ஜனநாயகத்துக்கு புறம்பான சட்டத்தை எந்த காமன்வெல்த் நாடும் இப்போது வைத்திருக்கவில்லை.

தேசியவாத போராட்டங்களையும் பின்னர் கம்யூனிஸ்டுகளையும் ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சி, அந்தச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் பிஎன் அரசாங்கம் எந்த விதமான எதிர்ப்பிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அந்தச் சட்டத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

பொது ஒழுங்கு, பாதுகாப்பு, கட்டுக்கோப்பு ஆகியவை தொடர்பான குற்றங்களை சமாளிக்க குற்றவியல் சட்டத்தில் நிறைய விதிமுறைகள் உள்ளன. நிர்வாகத்தை குறை கூறுகின்றவர்களை பயமுறுத்தவும் அமைதியாக இருக்கச் செய்வதற்கும் தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

அடே007: உதயா அவர்களே, உங்கள் நோக்கங்கள் புனிதமானவை. இறைவன் நிச்சயம் உங்களுக்கு
வழி காட்டுவான். வாழ்த்துக்கள்.

ராஜாசூலான்: உதயாவின் நடவடிக்கை சரியானது என நான் நம்புகிறேன். அவர் மலேசியாவில்
ஹிண்ட்ராப் இயக்கத்தின் உண்மையான தலைவர். சிறைத் தண்டனை பற்றியோ அபராதங்கள் பற்றியோ அச்சமடைய வேண்டாம். இடைக்காலத்தில் பொய்யும் தீமையும் வெற்றி பெறுவதாக தோன்றினாலும் உண்மையும் நீதியும் இறுதியில் வெற்றி அடையும்.

ரெத்னம்: உதயா குடும்பத்துக்கு உதவி செய்ய நிதி ஏதும் அமைக்கப்படுமானால் அதற்கு நன்கொடை
வழங்க நான் தயார்.

என்ன கதை: இரண்டு சகோதரர்கள். ஒருவர் கஷ்டமான வழியைத் தேர்வு செய்தார். இன்னொருவர்
எளிதான வழியை பின்பற்றினார்.

கஷ்டமான வழியை தேர்வு செய்கின்றவர்களே இறுதியில் தங்கள் இலட்சியத்தை அடைவர் என நமக்கு இளம் வயதில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TAGS: