இயக்குநர் – நடிகர் – எழுத்தாளர் – தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம்.
ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.
மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
மணிவண்ணன் அவர்கள் செம்பருத்திக்கு வழங்கிய நேர்காணல் : VIDEO
மணிவண்ணன் ஒரு சமூக சிந்தனையாளர். அவரது படங்களில் பேசப்பட்ட அரசியல் வசனங்கள் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழன் வழக்கம் போல…! அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஐயா மணிவண்ணனுக்கு மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கதின் வீர வணக்கம்
தமிழ்த் திரையுலகிற்கும், தமிழர்களுக்கும் மற்றுமொரு பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்திக்குப் பிரார்த்திப்போம்.
அவர் தாம் குடும்பத்தினற்கு ஆழ்ந்த அனுதபங்கள் ,
அவரது குடும்பத்திற்கு மலேசியர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ்த்திரையுலகம் நல்ல இயக்குனரையும் நடிகரையும் இழந்துள்ளது.
ஒரு சீர்திருததவாதியும்,தமிழின ஆதரவாளரையும் நாம் இழந்தது பேரிடி.அன்னாரின் குடும்பதிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
இன உணவாளரும் ஈழத்தை தன் நெஞ்சில் சுமந்த தமிழ் நாடு தமிழன் மணிவணன் அவர்களுக்கு எந்தன் வீர வணக்கம்.
நல்ல மனிதர் ,நல்ல இயக்குனர் ,,
நடிகர் மணிவண்ணன் ஓர் பண்பட்ட நல்ல நடிகர் இயக்குனர் சிறந்த சீர்திருத்த சிந்தனையாளர் அன்னாரின் மறைவை அறிந்தது வருந்துகிறேன். அன்னாரின் ஆன்மா அமைதிப்பெற வணங்குகிறேன் .
இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் நல்ல சமுதாய பற்றாளர் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை நல்ல நிலை அடைய அண்ணன் சிமான் உடன் இணைத்து குரல் கொடுத்த நல்ல மனிதரை நாம் இழந்துள்ளோம் .அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிராதிப்போம்.
அவரின் இறுதி மரியாதைக்கு புலிக்கொடி மறவாமல் போர்த்துங்கள் நண்பர்களே ! அன்னாரின் குடும்பத்துக்கு என் குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலி !