தேடும் பணி நிறுத்தப்பட்டது

1aikபினாங்கு அங்காடி வியாபாரியின் உடலைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி அவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் நிறுத்தப்பட்டது.

கடும் புயலில் பினாங்கு ஜாலான் மெக்கலிஸ்டரில் மெனாரா அம்னோ கட்டிடத்தின் உயரே இருந்த 50மீ. நீள இடிதாங்கி விழுந்ததில் ஒரு காருடன் ஆறு மீட்டர் ஆழ குழிக்குள் புதையுண்டதாக நம்பப்படும் லிம் சின் ஏய்க்கின் உடல் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அவருடைய கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தோண்டுவது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு ஆபத்து என்பதால் தேடும் பணி காலை 8மணிக்கு நிறுத்தப்பட்டது.