‘எங்களுக்கு சீனர் பிரதமராக வேண்டாம் தூய்மையான ஆட்சியே போதும்’

shahidan“சீனர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது  முக்கியமல்ல. நாங்கள் சீனர் பிரதமராக வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை’

அமைச்சர்: சீனர்கள் இனவாத உணர்வைக் கைவிட்டால் அவர்களும்  பிரதமராகலாம்

பார்வையாளன்: ஒர் இனவாதக் கட்சியும் வாய்ப்புக் கிடைக்கும் போது ‘Untuk  Bangsa, Ugama dan Negara’ என்னும் சுலோகத்தை உரத்த குரலில் சொல்லும்  அம்னோவை சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பாரபட்சமாக நடத்தப்படும்  சிறுபான்மை சீனர்களை இனவாதிகள் என துணிச்சலாக சொல்கிறார்.

அம்னோ பாரபட்சம் காட்டிய போதிலும் தனியார் துறையில் சிறுபான்மைச்  சீனர்கள் நன்றாகச் செயல்பட்டு வரிகளில் 80 விழுக்காட்டைச் செலுத்துவதை  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் ஹஷிம் உட்பட பொதுத் துறை
ஊழியர்களுக்கு அந்த வரிகளிலிருந்து தான் சம்பளம் கொடுக்கப்படுகின்றது.  ஆகவே ஊட்டும் கரங்களைக் கடிக்க வேண்டாம்.

டெலிஸ்டாய்: சீனர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும்  என கனவு காணவில்லை. பிரதமர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்  நியாயமானவராக, நீதியை நிலை நிறுத்துகின்றவராக, முன்னேற்ற சிந்தனை  கொண்டவராக இருந்தால் சீனர்கள் அவரை ஏற்றுக் கொள்வர்.

சீனர் ஒருவர் பிரதமராக வேண்டும் என சீனர்கள் விரும்புவதாக ஷாஹிடான்  கதை சொல்லக் கூடாது. அம்னோ பின்பற்றும் பிரிவினைவாத அரசியல், அதிகார  அத்துமீறல் ஆகியவற்றைக் கண்டு வெறுப்படைந்ததால் சீனர்கள் பிஎன் -னுக்கு  எதிராக புரட்சி செய்தனர்.

அது அம்னோவில் உள்ள உங்களைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.

இல்லம்: சீனர்களாகிய நாங்கள் இனவாதிகள் அல்ல. பிஎன் எதிர்ப்பாளர்கள் தான்.  சீனர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது  முக்கியமல்ல. நாங்கள் சீனர் பிரதமராக வேண்டும் என ஒரு போதும்  கேட்கவில்லை.

மக்களையும் நாட்டையும் பரிவுடன் கவனிக்கும் ஒருவரே பிரதமராக வேண்டும்.  அவர் நிச்சயம் மலேசியராக இருக்க வேண்டும்.

Gggg: பூமிபுத்ராக்கள் மட்டுமே அம்னோவில் உறுப்பினராகலாம். ஆனால் டிஏபி,  பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றில் எந்த இனத்தைச் சேர்ந்தவரும் உறுப்பியம்  பெறலாம். ஆகவே யார் இனவாதி ஷாஹிடான் அவர்களே ?

பழைய குடியானவன்: ஊழல், அதிகார அத்துமீறல், மோசடி, தேர்தல்
முறைகேடுகள் ஆகிய முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை
திருப்புவதற்கும் 13வது பொதுத் தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கும்   சீனர்களை இனவாதிகள் என அம்னோ பழி போட்டுக் கொண்டிருக்கிறது.

 

TAGS: