‘பிலிப்பினோவுக்கு நீல அடையாளக் கார்டு கொடுத்தது தேசத் துரோகமில்லையா ?

pasportஉங்கள் கருத்து : “அம்னோவில் பதவி வகிப்பவர்கள் மீது வழக்குப் போடுவதற்கு அந்தத்தேசத்  துரோக நடவடிக்கை போதுமானது”

‘பிலிப்பினோ குடியுரிமையைப் பெற்றார், அம்னோ செயலாளரானார்’

பெர்ட் தான்: சூக்கோர் அப்துல்லா என்ற பிலிப்பினோ 1976ம் ஆண்டு படகு  மூலம் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தார். அவர் பத்து ஆண்டுகளில்  குடியுரிமையை மட்டுமின்றி வாக்களிக்கும் உரிமைகளையும் பூமிபுத்ரா தலைவருக்கு  உரிய எல்லா சலுகைகளையும் அனுபவிக்கத் தொடங்கினார்.

மலேசியாவில் பிறந்து வாழும் நம்மைப் போன்ற பூமிபுத்ரா அல்லாதாரைக்  காட்டிலும் அதிகமான உரிமைகளையும் நன்மைகளையும் அவர் பெற்றுள்ளார்.

அவர் இப்போது அம்னோ தலைவர். மலேசியாவில் பிறந்த சீனர்களையும்  இந்தியர்களையும் குடியேற்றக்காரர்கள் என இனவாத சுலோகங்களை  முழங்குகின்றவர்களுடன் (தீவகற்ப அம்னோ தலைவர்களைப் பின்பற்றி) அவரும்  இருக்கக் கூடும். அது என்ன வினோதமாக இருக்கும்.

அடையாளம் இல்லாதவன்#19098644: அம்னோ தனது சொந்த நன்மைக்காக  சட்டவிரோத பிலிப்பினோக்களுக்கு மோசடியான வழிகளில் குடியுரிமை கொடுத்து  சபா மக்கள், மலேசியர்கள் ஆகியோருடைய உரிமைகளை மீறியுள்ளது  தெளிவாகியுள்ளது.

அந்த நேரத்தில் அம்னோவில் பதவி வகித்தவர்கள் மீது வழக்குப் போடுவதற்கு  அந்தத்தேசத் துரோக நடவடிக்கை போதுமானது.

என்ன நடக்கிறது: அது பெரிய தேசத் துரோகம் இல்லையா ? ஆனால் நமது ஜனநாயக  உரிமைகளைப் பயன்படுத்துவதும் தீய அம்னோ ஆட்சியை ஆதரிக்காததும் தேசத்  துரோகமாகும்.

அம்னோ இனிமேல் நிலைத்திருக்கவே கூடாது. அது நாட்டின் கருவூலத்தைத்  தொடர்ந்து கொள்ளையடிக்கிறது. நமது எதிர்காலத்தையும் கீழறுப்பு செய்கின்றது.

என்றாலும் அந்த தீய ஆட்சியை இன்னும் பலர் ஆதரிக்கின்றனர். ஊழல் இல்லாத  நல்ல ஆளுமையைக் கோருகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: சீனர்களும் இந்தியர்களும் ஆட்சியைக் கைப்பற்றுவது  பற்றி மலாய்க்காரர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்நியர்கள் ஒரு  நாள் மலேசியாவை ஆளப் போகின்றனர். அப்போது நாம் வருத்தம் அடைவோம்.

சிங்கம்: அவர் அம்னோ செயலாளரானார். ஆனால் இந்தியர்களும் சீனர்களும்  நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெற 20 முதல் 40 ஆண்டுகள் காத்திருக்க  வேண்டியுள்ளது. நல்ல காரியம் பிஎன்

சுப்ரமணியம் கிருஷ்ணன்: எல்லா அரச விசாரணை ஆணையங்களும் (ஆர்சிஐ)  பூஜ்யமாகி விடும். வழக்குரைஞர் விகே லிங்கம், தியோ பெங் ஹாக் மீது அரச  விசாரணை ஆணையங்களைப் போன்று இதுவும் -நடவடிக்கை இல்லை- என  முடிந்து விடும்.

மாமன்னருக்கு மனு அனுப்புவதற்கு யாராவது குடிமக்கள் கையெழுத்துக்களைத்  திரட்டும் இயக்கத்தைத் தொடங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் (இசி)மீதும்  எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்ய வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#36950150: அண்மைய எதிர்காலத்தில் வங்காள தேசி  ஒருவர் பிரதமரானாலும் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.

TAGS: