ரோஸ்மாவுக்கு கஸக் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது

Rosmahமலேசியப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் தமது பெர்மாத்தா  நெகாரா திட்டத்தின் மூலம் பாலர் கல்வியை மேம்படுத்தியதற்காக அவருக்கு  இன்னொரு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவர் நேற்று கஸ்க்ஸ்தானில் உள்ள அனைத்துலக தகவல் தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தின் (IITU) கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் Dr Kenzhegali Sagadiyev  அதற்கான விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

பெண்களுக்கு வலிமை கொடுக்கும் திட்டங்களையும் ஆற்றல் மிக்க
பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களையும் ரோஸ்மா தொடர்ந்து
மேற்கொண்டு வருவதாக தமது உரையில் Sagadiyev குறிப்பிட்டார்.

அந்த விருதை ஏற்றுக் கொண்ட ரோஸ்மா தமது உரையில் தமது பணியைத்  தொடருவதற்கு ஒர் ஊக்குவிப்பாக அந்த விருது திகழும் எனச் சொன்னார். அந்த  விருதை வழங்கிய கஸ்க்ஸ்தான் பல்கலைக்கழகத்துக்கும் அவர் நன்றி தெரிவித்துக்  கொண்டார்.

 

TAGS: