கோலாலம்பூரில் நாளை 505 கறுப்பு தினப் பேரணியைச் சமாளிப்பதற்கு போலீசாருக்கு உதவ இராணுவம் தயாராக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் சாடியுள்ளது.
” அண்மைய பேரணிகள் அனைத்தும் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றுள்ளன. விரும்பத்தகாத நடத்தைகள் எதுவும் அந்தப்
பேரணிகளில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படவில்லை.”
“ஆயுதப் படைகள் அழைக்கப்படும் எனச் சொல்வது போலீஸ் படையின் திறமைக் குறைவைக் காட்டுகின்றது,” என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சொன்னார்.
“சனிக்கிழமை அந்தப் பேரணியில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை விடுக்க உறுதி பூண்டுள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த ஆளும் கட்சி மீண்டும் முயலுவதாகத் தோன்றுகிறது,” என்றார் அவர்.
அந்தப் பேரணி அரசியல் சார்புடையது அல்ல. அது மலேசியாவில் நியாயமான, தூய்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதால் ஏமாற்றமடைந்துள்ள மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றும் தியான் சுவா குறிப்பிட்டார்.
இது போன்ற மக்கள் கோரிக்கை நிகழ்ச்சிக்கெல்லாம் இராணுவத்திடம் உதவி கோரமுடியும்.ஆனால் வெளி நாட்டுக்காரன் மாத கணக்கில் தன் ராணுவத்துடன் இன் நாட்டில் இருப்பான் அவனுடன் கலந்துரையாடுவார்கள்.வெண்ணை வெட்டி வீரர்கள்