‘குழந்தைகள் மதம் மாற்ற விவகாரத்தில் அமைப்புக்கள் ‘தில்லுமுல்லு’ செய்கின்றன’

covertகுழந்தைகள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படும் விவகாரத்தை  வழக்குரைஞர்கள் மன்றம், அமைச்சரவை, MCCBCHSTஎனப்படும் மலேசிய  பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கியம் தாவோ ஆலோசனை மன்றம் ஆகியவை  உட்பட பல தரப்புக்கள் மனித உரிமைகள் என்ற பெயரில் ‘தில்லுமுல்லு’  செய்வதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் கூறியுள்ளது.

முஸ்லிம் பெற்றோர் ஒருவர் குழந்தைகளை மதம் மாற்றம் செய்வதற்கு எதிராக  விடுக்கப்படும் அறிக்கைகள் முஸ்லிம்களுடைய உரிமைகள் குறித்து கேள்வி  எழுப்புவதற்குச் சமமாகும் என அதன் தலைவர் ஜைனுல் ரிஜால் அபு பாக்கார்  தெரிவித்தார்.

ஏனெனில் பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்ட போது பின்பற்றிய
சமயத்திலிருந்து வேறுபட்ட சமயம் ஒன்றுக்கு ஒரு குழந்தையை மதம்
மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் போதும் என கூட்டரசு  அரசமைப்பு கூறுவதாக அவர் சொன்னார்.

அத்துடன் கூட்டரசு அரசமைப்பில் குறிக்கப்பட்டுள்ள பெற்றோர் (parent)
என்பதற்கு தாய் அல்லது தந்தை என்றும் இருவரும் என எடுத்துக் கொள்ள  வேண்டிய அவசியமில்லை என கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள்  அடிப்படையில் அது அமைந்துள்ளதாகவும் ஜைனுல் குறிப்பிட்டார்.