உங்கள் கருத்து : ‘அன்புள்ள வான் அகமட் அவர்களே, நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் ? உங்கள் வார்த்தைகள் இசி மீதான நம்பிக்கையை மேலும் தளரச் செய்து விடும். நீங்கள் சகதியில் விழுந்து புரளப் போகின்றீர்கள்.’
இசி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வது பக்காத்தான் இரட்டை வேடத்தை காட்டுகின்றது
நியாயமானவன்: தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அவர்களே, பக்காத்தான் ராக்யாட்டை தாக்கியதின் மூலம் நீங்கள் இசி-யில் வேலை செய்வதற்குத் தகுதியற்றவர் என்பதை உலகிற்கு உணர்த்தி விட்டீர்கள்.
நீங்கள் உங்கள் வேலையில் பாரபட்சம் காட்டுவது மறுக்க முடியாத அளவுக்கு அம்பலமாகி விட்டது. எந்தத் தரப்பையும் சாராமல் நியாயமான, தூய்மையான தேர்தல்களை நடத்துவது உங்கள் பொறுப்பாகும்
எதிர்க்கட்சிகளை நீங்கள் சாடியிருப்பது நீங்கள் இனிமேல் இசி-யில் இருக்கக் கூடாது என்பதையும் அதிலிருந்து நீங்கள் விலக வேண்டும் என்பதையும் உணர்த்தி விட்டது.
நீதிபிஎல்எஸ்: இசி துணைத் தலைவர் ஏன் அரசியல்வாதியைப் போலப் பேசுகின்றார். தாம் ஒர் அரசாங்க ஊழியர் என்பதை அவர் மறந்து விட்டாரா ? தமது வேலையை பாரபட்சம் இல்லாமல் செய்ய வேண்டும். ஆனால் அவர் பிஎன் பேராளரைப் போன்று பேசுகிறார்.
பேராசிரியர்: அன்புள்ள வான் அகமட் அவர்களே நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் ? உங்கள் வார்த்தைகள் இசி மீதான நம்பிக்கையை மேலும் தளரச் செய்து விடும். நீங்கள் சகதியில் விழுந்து புரளப் போகின்றீர்கள்.
இசி அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும்.
போராட்டம்: இசி துணைத் தலைவர் அவர்களே, அரசியல் அறிக்கைகளை விடுப்பது உங்கள் வேலை அல்ல. நீங்கள் ஏற்கனவே இந்த நாட்டுக்கு நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தி விட்டீர்கள்.
ஜாம்ரி மாஹ்முட்: வான் அகமட் அரசாங்க ஊழியர். தேர்தல் ஆணையம் அவருக்குச் சம்பளம் கொடுக்கின்றது. கருவூல நிதியிலிருந்து அந்த ஆணையத்துக்கு பணம் போகின்றது. மக்கள் தேர்ந்தெடுத்தவர்களைக் குறை கூற அவருக்கு என்ன உரிமை உள்ளது.
அவர் சுதந்திரமாக பேச விரும்பினால் பதவி விலகி ஒர் அரசியல் கட்சி அல்லது அரசு சாரா அமைப்பில் சேர வேண்டும். அல்லது வாயை மூடிக் கொண்டு அரசு ஊழியரைப் போல வேலை செய்ய வேண்டும். உண்மையில் அவருக்கு பெரிய வாய். தமது எஜமானரை விட பெரிய வாய்.
2ம் தலைமுறை: தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தாமல் சேற்றை அள்ளி வீசும் அரசு நிறுவனங்கள் பட்டியலில் இசி-யும் இணைந்துள்ளது.
அரசியல்வாதிகள் தான் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி வீசிக் கொள்வார்கள். ஆனால் இசி-யும் அந்தச் சகதிக்குள் குதிப்பது அவர்கள் தலையில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது.
தகுதியின் அடிப்படையிலா இந்த அரைவேக்காடுகள் இதுபோன்ற உயர்ப்பதவிகளில் உட்கார்ந்திருக்கின்றன!
தேர்தல் ஆணையம் அல்ல, பாரிசான் அரசாங்க ஆணையம்.
தேர்தல் ஆணையம் அரசியல் சகதிக்குள் குதிக்க வில்லை அதற்கு பதிலாக மலத் தொட்டியில் நீச்சல் அடிக்கிறார்களாம்…!
பணம் வாங்கியாச்சி வேறு வழி இல்லை. இவர்களை எல்லாம் தூக்குலை போடணும், அப்பத்தான் மற்றவர்களுக்கு ஒரு படமாக இருக்கும். ஜனநாயகத்தை சீர்குலைக்கும் யாரா இருந்தாலும் இது தான் கதி.