தங்களது இரண்டு சிறு பிள்ளைகளை தமது கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய சர்ச்சைக்குரிய நடவடிக்கை தொடர்பில் இந்து மனைவி ஒருவர் சமய அதிகாரிகள் தம்மையும் மதம் மாற்ற முயன்றதாக கூறிக் கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் செனட்டர் பி வேதமூர்த்தியுடன் நிகழ்ந்த சமயங்களுக்கு இடையிலான விவாதத்தின் போது அந்தச் சம்பவத்தை சிரம்பானைச் சேர்ந்த எஸ் தீபா என்ற அந்த மாது விவரித்தார்.
2013 ஏப்ரல் 4ம் தேதி தமது கணவர் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றதாக அவர் சொன்னார்.
பிள்ளைகள் நெகிரி செம்பிலான் Pusat Dakwah Islamiah வுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர்கள் உடனடியாக முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தமக்கு தெரிய வந்தது என தீபா சொன்னார்.
பிள்ளைகள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கு தாம் ஒப்புதல் அளிக்கவில்லை என Pusat Dakwah Islamiahவில் இருந்த ustaz ஒருவரிடம் அவர் சொன்னார்.
“நாளை வருமாறும் மதம் மாற்றத்தை ரத்துச் செய்யும் சான்றிதழை
வழங்குவதாகவும் அவர் சொன்னார். ஆனால் நான் அடுத்த நாள் சென்ற போது எனக்கு ரத்துச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் மதம் மாறுமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினர். எனக்கு பணம் கொடுப்பதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர்,” என்றும் தீபா கூறிக் கொண்டார்.
ரகசியமாக நடைபெற்ற சமயங்களுக்கு இடையிலான விவாதத்தில் தீபாவும் பல அரசு சாரா சமய அமைப்புக்களின் பேராளர்களும் கலந்து கொண்டனர்.
இது போன்ற தரம் கெட்ட கீழ் தரமான நடவடிக்கைகளின் வழி புனிதமான இஸ்லாத்தை மாசுபடுத்துகின்றனர்!
ஜேம்ஸ் அவர்களே இவர்கள் இஸ்லாத்தை மாசுபடுத்தவில்லை , அவர்கள் கோட்பாடே அது தான். இந்தியாவில் இது தான் நடக்கிறது தீபா அவர்கள் சொல்வதை நான் முழுமையாக நம்புவேன். காரணம் எனக்கு நன்கு பழக்கமான நண்பர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் சாதாரண சூப்பர்வைசர் வேலையே செய்கிறார். அவர் வீட்டு லோன் கேட்க வங்கிக்குச் சென்ற போது அவரிடம் போதுமான பத்திரம் இல்லாததால் அவர் வாங்கவிருக்கும் வீட்டின் விளையும் கொஞ்சம் அதிகம் என்பதாலும் அந்த வங்கியில் வேலை செய்கின்ற சீனா இளைஞர் (புதிதாக மதம் மாறியவர் இப்போது அவர் மலேசியன்). என் நண்பரிடம் மதம் மாறினால் இதை விட விலை உயர்ந்த வீடு வாங்கினாலும் குறைவான வட்டியே விதிக்கப்படும், அகவே நீ ஒரு மலாய் பெண்ணை திருமணம் செய்துகொள், அவளுக்கும் பணமும் கிடைக்கும் அதன் பிறகு என்னை வந்து பார் என்று யோசனை கூறியுள்ளார். இந்திய ஆண்களே கவனம்… பெண்களிடம் இருக்கும் மன கட்டுப்பாடு ஆண்களிடம் இல்லாததால் வரும் வினை இது .