உங்கள் கருத்து : “சுமத்ராவில் உள்ள தோட்டங்களில் அரசாங்கத்துக்கு பெரிய அளவில் பங்குகள் உள்ளன. ஆகவே புகை மூட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் அது உண்மையில் ஆர்வம் காட்டப் போவதில்லை.”
புகை மூட்டம்: மூவாரிலும் லேடாங்கிலும் பிரதமர் அவசர காலத்தைப் பிரகடனம் செய்தார்.
பார்வையாளன்: ஒரு நாட்டில் அந்நிய நிறுவனம் குற்றம் புரிந்தால் அந்த நாடு விசாரணை நடத்தி அதனைத் தண்டிக்கும்.
பல பெரிய இந்தோனிசிய நிறுவனங்களும் அந்நிய நிறுவனங்களும் கடந்த பல ஆண்டுகளாக இந்தோனிசியாவில் காட்டுத் தீ சம்பவங்களுக்குக் காரணமாக இருந்து வருகின்றன. அதனால் புகை மூட்டம் உருவாகிறது.
தாங்கள் விசாரிப்பதாகவும் சில அந்நிய நிறுவனங்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இந்தோனிசியத் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்தோனிசிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தண்டிக்க விரும்பவில்லை.
ஆகவே இந்தோனிசிய அரசாங்கப் போக்கு மாறா விட்டால் இந்தோனிசிய மக்களும் அண்டை நாடுகளின் மக்களும் தொடர்ந்து துயரங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
சூதாட்டம்: இது அமெரிக்காவில் நிகழ்ந்திருந்தால் அதிபர் பாராக் ஒபாமா தொலைக்காட்சியில் உரையாற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மக்களுக்கு உறுதி அளிப்பார். நிலவரத்தை அவ்வப்போது அறிவிப்பதாகவும் சொல்வார்.
சீனாவில் பிரதமர் தமது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளாமல் பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குச் செல்வார். இங்கு பிரதமர் நஜிப் அந்தச் செய்தியை அறிவிக்குமாறு இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேலைப் பணித்துள்ளார். அவரது குரல் என்ன அவ்வளவு தெய்வீகமானதோ ?
ஸ்விபெண்டர்: நடவடிக்கை இல்லை. எல்லாம் வெறும் பேச்சுத் தான். அம்னோ ஆதிக்கம் பெற்ற அரசாங்கத்திடமிருந்து நாங்கள் இது போன்ற வெறும் பேச்சுக்களைக் கேட்டு எங்களுக்குச் சலித்துப் போய் விட்டது.
முகநூலைப் பயன்படுத்தி அவசர காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அது முட்டாள்தனமான, பொறுப்பற்ற, முரண்பாடான செயலாகும். அவசர காலத்தைச் சமாளிக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?
மோஹிகான்: வழக்கம் போல அரசியல்வாதிகள் மற்றவர்கள் மீது பழி போடுகின்றனர். பொது மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கின்றனர். சாதாரண குடிமக்களாகிய நாம் மூச்சு விடத் திணறுகிறோம்.
அடையாளம் இல்லாதவன்_40f4: சிங்கப்பூரைப் போன்று அரசாங்கம் இலவசமாக முகமூடிகளை கொடுக்கும். ஆனால் நீங்கள் அதனை உங்கள் பகுதியில் உள்ள பிஎன் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அதில் ஒரே மலேசியா சின்னமும் இருக்கக் கூடும்.
அடையாளம் இல்லாதவன்_3e86: ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் நம் நாட்டை புகை மூட்டம் சூழ்கிறது. சில ஆண்டுகளில் கடுமையாக உள்ளது.
குற்றவாளிகளுக்கு (பெரும்பாலும் செம்பனைத் தோட்ட நிறுவனங்கள்) கடுமையான தண்டனை விதிக்கப்படுவதில்லை. அவற்றுக்கு சில ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்படுகின்றது. அடுத்த மீண்டும் அவை தங்கள் வேலையைத் தொடரும்.
பெரிய தொழில்கள் என வரும் போது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ளத் தயாராக இல்லை. அந்தத் தொழில்கள் நல்ல தொடர்புகளைக் கொண்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானதாகும். சாதாரண மக்கள் நச்சுக் காற்றை சுவாசிக்கும் போது அந்த பிரமுகர்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க வேறு இடங்களுக்கு விமானத்தில் பறந்து விடுவர்.
அடையாளம் இல்லாதவன்_40f4: சுமத்ராவில் உள்ள தோட்டங்களில் அரசாங்கத்துக்கு பெரிய அளவில் பங்குகள் உள்ளன. ஆகவே புகை மூட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் அது உண்மையில் ஆர்வம் காட்டப் போவதில்லை.
அட பாவிகளா ! காட்டை கொளுத்தி விட்டு ,எங்களை மூக்கு கவசம் போட சொல்கிறாயே ! இதுக்குதான் ஒரே மலேசியா இலவச கிளினிக்கா ?
முநுடுயுPயு ளுயுறுஐவு நட வேண்டும் என்ற நோக்கத்தில் கொளுத்திப்புட்டாணுங்க, இது வருஷம் வருஷம் நடக்கும் ஒரு நாடகம்… இந்த நாடகத்தில் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம் , மக்களுக்கு ஊஊஊஊ, சிகிரேட் புகைய கூட தாங்கிக்கொள்ளலாம்… ஆனால் காட்டு புகையை தாங்கிக்க முடியவில்லை
தில்லு முள்ளு..தில்லு முள்ளு …உள்ளமெல்லாம் கல்லு முள்ளு…. யாருடைய தில்லு ? யாருடைய முள்ளு? யாருடைய உள்ளம்? நான் சொல்ல போவதில்லை…உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன்……… நமக்கு வேண்டாம்பா வம்பு…. அப்புறம் தும்பு!