போர்ட் கிளாங்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியது. அங்கு அந்தக் குறியீடு 487 ஆகப் பதிவானது. அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘மிகவும் ஆரோக்கியமற்ற நிலை’ பதிவாகியுள்ளது.
சுற்றுசூழல் துறை இன்று காலை 7.00 மணிக்கு வெளியிட்ட விவரம்: பந்திங் (292), ஷா அலாம் (289) கோலா சிலாங்கூர் (242), பெட்டாலிங் ஜெயா (213). ஆகவே சிலாங்கூரில் புகை மூட்ட நிலை மோசமடைந்துள்ளது.
பேராக்கிலும் அந்தக் குறியீடு 300ஐ தாண்டியுள்ளது. ஸ்ரீ மஞ்சோங்கில் அது 288 ஆகப் பதிவானது.
காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு விவரங்கள்: 0-5 கற்றுத் தரம் நன்றாக உள்ளது, 51-100 மிதமானது, 101-200 ஆரோக்கியமற்றது, 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது, 301க்கு மேல் மனித ஆரோக்கியத்துக்கு அபாயகரமானது.
இன்று செலங்கோரில் என்னே நிலை? நாளுக்கு நாள் புகை முட்டம்
அதிகரித்து போகிறது