இனி தேர்தல் முடிவு சரிதானா என்ற பேச்சுக்கே இடமில்லை:அமைச்சர்

mpsமாற்றரசுக் கட்சி எம்பிகள் அனவரும் பதவிஉறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இனி அவர்கள், தேர்தல் முடிவுகள் சரியா, அரசாங்கம் சட்டப்பூர்வமானதா என்றெல்லாம்  கேள்வி எழுப்பக் கூடாது என்கிறார் பிஎன் அமைச்சர் ஒருவர்.

நேற்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் 89 பேரும் நாடாளுமன்றத்தில் எம்பிகளாக பதவி ஏற்றபோதே ‘505 கறுப்புதின’ இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது  எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் சபரி சீக் கூறினார்.

“அவர்களால் தேர்தல் தோல்வி தந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.