திரெங்கானுவின் கோலா பெசுட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடைத் தேர்தல் பக்காத்தான் ரக்யாட்டைப் பொறுத்தவரை “முக்கியமானதாகும்”, என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் அச்சட்டமன்றத் தொகுதியை காலஞ்சென்ற அம்னோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ரஹ்மான் மொக்தார் வென்றார். அவர் 2,434 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸின் நப்சியா இஸ்மாயிலை தோற்கடித்தார்.
“அம்னோ கணிசமான பெரும்பான்மையில் வெற்றி பெற்றது என்றாலும், அத்தொகுதியைக் கைப்பற்ற பாஸும் பிகேஆரும் கடுமையாக போராடும்”, என்றாரவர்.
திரெங்கானு சட்டமன்றத்தில் பிஎன் 17 இடங்களையும் பக்காத்தான் 15 இடங்களையும் பெற்றுள்ளன. இடைத் தேர்தலில் பக்காத்தான் வென்றால் திரெங்கானுவில் தொங்கு சட்டமன்றம் அமையும்.
இடை தேர்தல் மூலம் ஒரு மாநிலத்தை கைப்பற்றலாம் என்ற எண்ணம் கொண்ட அனுவரின் செயல் தோல்வியில் முடியும் என்பது திண்ணம் .இந்தியரின் நலன் காக்க தவறி விட்டார் இவர் , மனம் குமுறுகிறது .
இந்த இடை தேர்தலில் PKR படும் தோவி அடியும் ,,எப்ப நஜிப் கூட சேர்ந்து விருந்து உன்னுனானுங்க்களோ ,,அன்ன்றேக்கே PKR மதிப்பு செத்துவிட்டது ,
நஜிப்பும்,அன்வாரும் அரசியலில் இரு துருவங்கள். நம்மை போல மனதில் வைத்துக்கொண்டு பாறாங் எடுப்பதில்லை ,நாகரீகமானர்கள். தற்போது சமையல் எண்ணெயும் ,சீனியும் தட்டுப்பாடு, பிரதமர் நாட்டை சரிவர நடத்தவில்லை என்று குறைபடுங்கள்,இதுவும் அவர் வேலைதான்.
பல பேர் பல மாதிரி பேசலாம் ஆனால் அரசியலில் இருப்பவர்களுக்குத்தானே தெரியும்…அதுவும் ஓர் எதிர் கட்சி தலைவரராக இருப்பவர்க்கு இன்னும் தலை வலி அதிகமாக இருக்கும்.அரசியலில் கவனமாக காய் நகர்த்த வேண்டும்.இவ்வளவு பொருத்தாச்சி இன்னும் எவ்வளவு தூரம் போராங்கன்னு பார்ப்போம்…இதுக்கு மேல் நம்மை யாரும் எமாற்ற முடியாது.இனி எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்தியனாக செயல்படுவோம்… நன்றி…