“அமைச்சரும் இசி-யும் எந்தப் பாதுகாப்புக் காரணங்களைப் பற்றிப் பேசிகின்றனர் ? பொதுத் தேர்தல் முடிந்து விட்டது. ஆகவே அவர்கள் யாரை அல்லது எதனைப் பாதுகாக்கின்றனர் ?”
இரசாயனப் பொருள் ஏதுமில்லை. வெறும் உணவுப் பொருளில் கலக்கும் சாயமே (food colouring)
சேரிநாய்: அந்த அழியா மையை விநியோகித்த நிறுவனத்தின் பெயரை
அறிவிப்பதால் பாதுகாப்புக்கு என்ன பாதகம் ஏற்படப் போகிறது என்பதை
பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் விளக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புக்கு அதனால் என்ன இடையூறு விளையும் ?
இதில் அம்னோ சேவகர் நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதற்கான அடையாளங்களே அவை. தயாரிப்பதற்கு சில ஆயிரம் ரிங்கிட் மட்டுமே செலவான தரம் குறைந்த பொருளுக்கு மோசடிக்காரர்கள் 6.9 மில்லியன் ரிங்கிட்டை சுருட்டிக் கொண்டு விட்டனர்.
அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட்டால் ஊழல் மலிந்த அம்னோ
சேவகர்களுடன் அதற்கு உள்ள தொடர்பு அம்பலமாகி விடும்.
இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்பும் இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரும் மலேசியர்களுக்கு பெரும் பாவத்தை செய்துள்ளனர். ஆனால் வழக்கம் போல எதுவும் நடக்காது.
டேனியல்: அமைச்சரும் இசி-யும் என்ன பாதுகாப்புக் காரணங்களைப் பற்றிப் பேசிகின்றனர் ? பொதுத் தேர்தல் முடிந்து விட்டது. ஆகவே அவர்கள் யாரை அல்லது எதனைப் பாதுகாக்கின்றனர் ?
அந்த 6.9 மில்லியன் ரிங்கிட் ஊழலுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். வெறும் 2,000 ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக தியோ பெங் ஹாக் ஒர் இரவு முழுவதும் விசாரிக்கப்பட்டார். மரணமடைந்தார்.
ஹோல்டன்: அந்த மையை விநியோகம் செய்த நிறுவனத்தின் அடையாளம் எப்போது பரம ரகசியமானது ? அது என்ன அதிகாரத்துவ ரகசியச் சட்ட விவகாரமா ?
உணவுப் பொருளில் கலக்கும் சாயத்தை சிறிய மளிகைக் கடைகளில் மிகவும் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
மலேசியா வாட்ச்4: ‘பாதுகாப்பு காரணங்கள்’ என்பது கவைக்கு உதவாத வாதம். யார் அந்த அழியா மையை வழங்கியது என்பது முக்கியமல்ல. இசி மலேசிய வாக்காளர்களை ஏமாற்றியுள்ளது. அதனால் அதன் தலைமைத்துவம் விலக வேண்டும்.
ஆட்டம்: அந்தக் கதை நீண்டு கொண்டே போகிறது. சுவாரசியமாகவும்
இருக்கிறது. அதன் சில நிகழ்வுகளை பார்ப்போம்:
1. அந்த மையை அழிக்க முடியும் என்பதை இசி மறுத்தது
2. ஊழியர்கள் போத்தலை நன்றாக குலுக்கவில்லை
3. ஹலால் விவகாரத்தினால் அந்த மையின் ‘திறமை’ குறைக்கப்பட்டது
4. உணவுச் சாயம் சேர்க்கப்பட்டுள்ளது
அடுத்து என்ன ? அந்த மையில் சில்வர் நைட்டிரேட் கலக்கப்பட்டுள்ளது. அது ஐந்து முதல் ஏழு நாட்களுக்குத் தாங்கும் என முதலில் சொல்லப்பட்டது. இப்போது உணவுப் பொருளில் சேர்க்கப்படும் சாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இசி, அந்த மையை விநியோகித்த நிறுவனத்தின் பெயரை வெளியிட வேண்டும். அத்தகைய அம்சங்களுடன் (specfications) மையை வழங்குமாறு விநியோக நிறுவனத்தை பணித்தவர் யார் ?
வணக்கம். நம் நாட்டை விட இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அதிகம் அப்படி இருக்கையில் அங்கே எந்த மையை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஏன் அவர்களை கேட்கவில்லை.
ஹலால் என்பது அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் பொருந்தும் என்பதை இவர்கள் மறக்க கூடாது.
சொல்லிவிட்டால் குட்டு வெளியாகி விடுமே!
எதிர்கட்சிகள் இ சி யின் மீது போலீசில் புகர் செய்து நீதியின் முன்னாள் நிறுத்தி குற்றம் சாட்டப்படவேண்டும்.அறிக்கைகளும் கேள்விகளும் இ சி யை ஒன்றும் செய்துவிடாது. சட்டப்படி எதிர்கட்சிகள் இ சி யின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்கிறார்கள்.
தரமில்லாத,தரம்கெட்ட அந்த அழியும் மையை பாதுகாக்க தரம் கெட்டா விளக்கங்கள்,ஒரு கால் ரோசம்மா நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்பட்டு இருக்குமா?ஈசி ஆணைய தலை முதல் வால் வரை பதவி விலகும் வரை நன்றாக குலுக்குங்கள், நாட்டின் அவமானச்சின்னங்கள்!