எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அறிவுரை கூறுவதற்கு ஒர் அனைத்துலக ஆலோசனை வாரியம் அமைக்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் கூறுகிறார்.
“சிறந்த அனைத்துலக நடைமுறைகளுக்கு இணையாக எம்ஏசிசி அடைவு நிலையை உயர்த்துவதும் எம்ஏசிசி குறித்த அனைத்துலக எண்ணத்தை சீர்படுத்துவதும் அந்த வாரியம் அமைக்கப்படுவதின் நோக்கம்,” என லாவ் நேற்று விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்த வாரியத்தில் இடம் பெறுவர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் ஹாங்காங், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஆகியவற்றை ஊழல் தடுப்பு அமைப்புக்களைச் சார்ந்த பிரபலமான தனிநபர்களும் இடம் பெறுவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேட்பதற்கு “சரியான முடிவு” என்ற சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இது நாள் வரை உள்ள அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது அம்னோ சொல்லுவது மட்டும் தான் முடிவு என்னும் நிலையிலிருந்து மாறாது என்றும் சொல்லத் தோன்றுகிறது!