எட்டு மாநிலங்களில் தொங்கு சட்டமன்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அவற்றில் உள்ள மொத்த இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார்.
இவ்வாண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறு நிர்ணயத்தின் போது இரட்டைப் படையாக மொத்த சட்டமன்ற இடங்களைக் கொண்ட மாநிலங்களில் காணப்படும் பலவீனம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
“அந்த மாநிலங்களில் குறைந்தது ஒரு சட்டமன்ற இடத்தை இசி அதிகரிக்க வேண்டும்,” என்றார் அவர்.
திரங்கானு கோலா பெசுட்டில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி பெற்றால் பிஎன் -னுக்கு 16 இடங்களும் பக்காத்தான் ராக்யாட்டுக்கு 16 இடங்களும் இருக்கும். அதனால் அங்கு தொங்கு சட்டமன்றம் ஏற்படலாம். அந்த இடைத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்றும் கர்பால் சொன்னார்.
தொங்கு சட்டமன்றம் மக்கள் வரிப்பணத்தில் புதிய தேர்தலுக்கு வழி கோலக் கூடும் என அவர் மேலும் கூறினார்.
இரட்டை படை எண்களில் சட்டமன்ற இடங்களைக் கொண்ட மாநிலங்கள்: பினாங்கு (40), கெடா (36), பாகாங் (42), சிலாங்கூர் (56), நெகிரி செம்பிலான் (36), ஜோகூர் (56), சபா (60).
நீங்கள் முதலில் உங்கள் திருவாயை மூடுங்கள்