எம்ஏசிசி தாயிப் புலனாய்வைத் தாமதப்படுத்த காரணங்களைச் சொல்கிறது

taib“எம்ஏசிசி எங்களுக்கு கால வரம்பைக் கூறுங்கள். தாயிப் மாஹ்முட் மீதான  புலனாய்வு இவ்வாண்டு முடியுமா ? அடுத்த ஆண்டு ? பத்து ஆண்டுகள் ?  அல்லது…?”

ஆவணங்கள் எம்ஏசிசி: பெருவாரியாக இருப்பதால் தாயிப் புலனாய்வுக்குக் காலம்  பிடிக்கிறது

காமிகாஸி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டுக்கு எதிராக உள்ள  பல வழக்குகளை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒன்றாக  புலனாய்வு செய்ய வேண்டியதில்லை. ஒரு வழக்கை மட்டும் புலனாய்வு செய்தால்  போதும்.

எடுத்துக்காட்டுக்கு மலேசியாவில் முதலமைச்சர் ஒருவர் உலகில் பணக்கார  மனிதர்களில் ஒருவராகத் திகழ்வதற்கு எப்படிச் செல்வத்தை சேர்த்தார் ?

புளாக்ஸ்மித்: இது தாமதப்படுத்தும் தந்திரம். எம்ஏசிசி சில முக்கியமான  விஷயங்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு புலனாய்வை  விரைவுபடுத்தலாம். மற்றவற்றைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

கவனம்: ஒரே ஒரு கோப்பு அல்லது புகாரை வைத்துக் கொண்டு எம்ஏசிசி
முன்னாள் டிஏபி உதவியாளர் தியோ பெங் ஹாக்-கை விசாரிக்கலாம். தாயிப்பை  சிக்க வைப்பதற்கு 400 கோப்புக்கள் போதுமானவை. எம்ஏசிசி வேண்டுமென்றே  தாமதப்படுத்துகின்றது.

கட்டுஷா: எம்ஏசிசி மக்களுக்கு பொய்யான நம்பிக்கைகளைக் கொடுக்கக் கூடாது.  அந்த ‘pek moh’வை (வெள்ளை முடிக்காரர்) தொடுவதற்கு அம்னோ கூட அஞ்சும்  வேளையில் யார் அவரைத் தொட முடியும் ?

எறும்பு: எல்லா ஆதாரங்களையும் தாயிப் அழிப்பதற்கு எம்ஏசிசி அவகாசம்  கொடுக்கின்றது. ஆகவே எம்ஏசிசி-யைக் குறை சொல்ல வேண்டாம். பிஎன் -னை  மீண்டும் அதிகாரத்தில் அமர்த்திய மக்களையே குறை கூற வேண்டும்.

நீதி மலேசியன்: எம்ஏசிசி-க்குத் தாயிப் மீது குற்றம் சாட்டுவதற்குத் துணிச்சல்  இல்லை. காரணம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சிறுபான்மை அரசுக்கான  ஆதரவை அவரது 14 எம்பி-க்களும் மீட்டுக் கொண்டால் கூட்டரசு அதிகாரம்  மீதான பிஎன் பிடி முடிவுக்கு வந்து விடும்.

விசுவாசி: எம்ஏசிசி எங்களுக்கு கால வரம்பைக் கூறுங்கள். தாயிப் மாஹ்முட்  மீதான புலனாய்வு இவ்வாண்டு முடியுமா ? அடுத்த ஆண்டு ? பத்து ஆண்டுகள்  ? அல்லது…?

ஒடின்: புலனாய்வுக்குக் காலக் கெடு இல்லை. பொது மக்கள் அந்த விஷயத்தை  காலப் போக்கில் மறந்து விடுவர் என்ற நம்பிக்கையில் புலனாய்வு நீண்டு  கொண்டே போகும்.

 

TAGS: