குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும்

kuganசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த  போது மரணமடைந்த ஏ குகன் குடும்பம் சமர்பித்த சிவில் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை எதிர்த்து அரசாங்கமும் போலீசும் மேல் முறையீடு செய்து கொள்ளும்.

அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று வெளியிட்டார்.

அரசாங்கமும் போலீசும் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீட்டை தாக்கல்  செய்யும் என அவர் சொன்னார். அதில் தோல்வி கண்டால் கூட்டரசு  நீதிமன்றத்துக்கும் அவை முறையீடு செய்யும் என்றார் அவர்.

 

TAGS: