குகன் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய ஏன் எங்கள் நிதிகளைப் பயன்படுத்த வேண்டும் ?

kugan“குகன் வழக்கில் அரசாங்கம் ஏன் முறையீடு செய்ய வேண்டும் ? அதிகாரத்தைத்  தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிநபர் அதனை ஏன்  செய்யக் கூடாது.”

குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும் என்கிறார் ஸாஹிட்

பல இனம்: உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவர்களே, சிவில்  வழக்கில் ஏ குகன் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய அரசாங்கம் எண்ணுகிறது  எனச் சொல்ல வருகின்றீர்களா ?

குகன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட ஒருவரைக் காப்பாற்ற  மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்த அவர் விரும்புகிறாரா ?

இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. ஒரு வேளை அப்போது சிலாங்கூர்  போலீஸ் தலைவராக இருந்த காலித் அபு பாக்காரும் ஆணைகளுக்கு  கீழ்ப்படிகின்றாரோ என்னவோ ? எது எப்படி இருந்தாலும் குற்றவாளி என்பது  தான் தீர்ப்பு.

அன்சோன்: குகன் வழக்கில் அரசாங்கம் ஏன் முறையீடு செய்ய வேண்டும் ?  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிநபர்  அதனை ஏன் செய்யக் கூடாது.

அரசாங்கம் அதிகார அத்துமீறலை சகித்துக் கொள்ளாது என ஸாஹிட்
சொல்கிறார். அப்படி இருக்கும் போது அரசாங்கமும் போலீசும் ஏன் முறையீடு  செய்ய வேண்டும் ? அது அவர் சொன்னதற்கு முரணாக இல்லையா ?

கிட் பி: குகன் மரணத்தைச் சூழ்ந்துள்ள நிகழ்வுகளை மறைப்பதற்கு முதுநிலை  போலீஸ் அதிகாரிகள் செய்த முயற்சிகளுக்கான ஆதாரங்களை அந்த சிவில்  வழக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

கலா: ஸாஹிட், உங்களை குகன் தாயாருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போம்.  உங்கள் முறையீட்டுக்கான அடிப்படை என்ன ? குகன் சுபாங் ஜெயா போலீஸ்  காவலில் இருந்த போது 45 காயங்களைச் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டிருக்க  முடியாது. அது முடியுமா என்ன ?

கைரோஸ்: அரசாங்கம் ஏன் ஒரு முறையாவது தவறை ஒப்புக் கொள்ளக் கூடாது  ? உள்துறை அமைச்சருடைய நடவடிக்கை மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்த வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் முறையீடு செய்வதற்கு என்ன இருக்கிறது ?  இழப்பீட்டை கொடுத்து விடுங்கள். நிச்சயம் அரசாங்கத்திற்கு நிதி ஆற்றல்  உள்ளது.

பார்னி பிளிண்ஸ்டோன்: மதிப்புக்குரிய நீதிபதி விடி சிங்கம் அவர்களுக்கு என்  வணக்கம். உங்கள் தீர்ப்பு மூலம் நீங்கள் வெள்ளத்தைத் திறந்து விட்டீர்கள்.  இறந்தவர்கள் மீது கூட இந்த சிறுபிள்ளைத்தனமான அரசாங்கம் நடவடிக்கை
எடுக்கும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது.

அடையாளம் இல்லாதவன்_VV: மேல் நீதிமன்றங்கள் எளிதாக மாற்ற முடியாத  அளவுக்கு நீதிபதி எல்லா உண்மை நிலைகளையும் தீர்ப்பில் எழுதுவார் என நான்  நம்புகிறேன்.

ஹலோ: உள்துறை அமைச்சர் அவர்களே, முறையீட்டு நீதிமன்றத்திலும் கூட்டரசு  நீதிமன்றத்திலும் முறையீடுகள் தோல்வி கண்டால் ஐஜிபி விலகுவார் என நீங்கள்  ஏன் சொல்லவில்லை ?

TAGS: