மதமாற்றச் சட்டமசோதா: மசீசாவும் மஇகாவும் என்ன செய்யப்போகின்றன?

01713bgpicஉங்கள் கருத்து  ‘சட்டமியற்றலில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் மசீசவும் மஇகாவும் விடுக்கும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. ’

மதமாற்றச் சட்டம் திருத்தப்படுவதை அறிய மஇகாவும் ‘அதிர்ச்சி’

ஆரீஸ்46: மசீசாவும் மஇகாவும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாமலேயே முஸ்லிம்-அல்லாதாரின் அரசமைப்பு உரிமைகளைக் கீழறுக்க அம்னோ கமுக்கமாக மேற்கொள்ளும் முயற்சி அது எந்த அளவுக்கு உங்களை உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஒப்புக்காக எதிர்ப்புக் குரல் எழுப்புவதைத் தவிர வேறு ஏதேனும் சுய-மரியாதை உங்களிடம் இருக்கிறதா?

எல்லாவற்றுக்கும் பணிந்து போவதால்தானே மலேசியர்கள் உங்களைக் குறை கூறுகிறார்கள், உங்களை விட்டு விலகிப் போகிறார்கள். என்றுதான் பிஎன் பங்காளிக் கட்சிகளுக்கு“பொதுமய்யா போதும்” என்று அம்னோவிடம் திட்டவட்டமாக சொல்லும் துணிச்சல் வருமோ?.

பேச்சு போதும்: மஇகா பொருளாளர் ஜஸ்பால் சிங் அவர்களே, உங்கள் கட்சியை ஆலோசனை கேட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அம்னோவிடம் ‘கூடாது’ என்று சொல்லும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?

கலந்தாலோசனை என்பதுதான் பிஎன்னில் கிடையாதே. அம்னோ தீர்மானிக்கும். பிஎன் அப்படியே ஏற்றுக்கொள்ளும்.

சட்ட திருத்த விவகாரத்தில் மஇகா வியூக இயக்குனர் எஸ். வேள்பாரியின் நிலைபாடு என்ன?

கதுஷா: மசீச, மஇகா, கெராக்கான், பிபிபி முதலிய கட்சிகளைக் கேட்டிருந்தாலும் அவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள். மவுனமாக தலையை ஆட்டி இருப்பார்கள்.

வழக்குரைஞர் மன்றம் சுட்டிக்காட்டிய பின்னர் மக்களுக்காக போராடுவதாகக் காட்டிக் கொள்ள வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

பால் வாரன்: சட்டம் இயற்றுவதில் அம்னோ-அல்லாத கட்சிகள் எந்த அளவு சம்பந்தப்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்க இது ஒன்றே போதும்.

பிஎன்னின் முஸ்லிம்-அல்லாத உறுப்பினர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.  அதாவது அவர்கள் ‘ஆமாம் சாமிகள்’ என்ற வகையில்தான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சட்டமியற்றலில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் மசீசவும் மஇகாவும் விடுக்கும் அறிக்கைகள் உணர்த்துகின்றன.

ஜேஎம்சி:  மசீசவும் மஇகாவும் சட்டமசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். மசோதா மீட்டுக்கொள்ளப்படவில்லை என்றால் அவை பிஎன்னுக்குக் கொடுக்கும் ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும்.

TAGS: