குழந்தைகளை பெற்றோர்களில் ஒருவர் மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) 107(b) பிரிவுக்கான திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கெடா கெராக்கான் இளைஞர் பிரிவு மருட்டியுள்ளது.
கூட்டரசு அரசமைப்பின் 12(2) பிரிவு எல்லா நேரங்களிலும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என அதன் தலைவர் தான் கெங் லியாங் கூறுகிறார்.
“நாடாளுமன்றம் 107(b) பிரிவை திருத்தும் மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால் அந்தத் திருத்தம் கூட்டரசு அரசமைப்பு உணர்வுக்கு முரணாக இருப்பதால் கெடா கெரக்கான் இளைஞர் பிரிவு அதனை சட்ட ரீதியாக எதிர்க்கவும் தயங்காது,” என அவர் சொன்னார்.
பெற்றோர்களில் ஒருவர் மட்டும் தன்மூப்பாக குழந்தைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்ற அனுமதிப்பது அரசமைப்புக்கு எதிரானது என வழக்குரைஞர் மன்றமும் கூறியுள்ளது.
அந்த உத்தேசத் திருத்தத்தை மசீச, மஇகா, MCCBCHST என்ற மலேசிய
பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் ஆகியவையும் ஆட்சேபித்துள்ளன.
ஆனால் ம இ கா கை கட்டி வாய் பொத்தி வாலை ஆட்டி நிக்கும். நன்றி யுள்ள நாய்.