தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க நுருல் இஸ்ஸா தீர்மானம் தாக்கல்

1 nurulலெம்பா பந்தாய் பிகேஆர் எம்பி  நுருல்  இஸ்ஸா அன்வார், 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை நீக்கக் கோரும் தனி உறுப்பினர் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அது மக்களவை விவாதத்துக்குக் கொண்டுவரப்படும் என்று  “நம்பிக்கையுடன்” இருப்பதாக அவர் கூறினார்.

“வழக்கமாக மாற்றரசுக் கட்சியினரின் தீர்மானம் ஏற்கப்படுவதில்லை.  ஆனால், இது அரசாங்கமே உறுதிகூறியுள்ள ஒரு விசயம்”,  என இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஓராண்டுக்குமுன், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உருமாற்றத்திட்டத்தின்கீழ் தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்ததைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

TAGS: