“ஆகவே குற்றச் செயல் நிலவரம் மோசமாக உள்ளது என்பதை ஒர் அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும். சாதாரண மக்கள் கொள்ளையடிக்கப்படும் போது, பாலியல் வன்முறைக்கு இலக்காகும் போது ,கொல்லப்படும் போது அவர்கள் கற்பனை என்று சொல்கின்றனர்”
குற்றச் செயல்கள் கூடுவது கற்பனை அல்ல என கைரி திருட்டுச் சம்பவத்திற்கு பின்னர் சொல்கிறார்
நியாயமானவன்: விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் அந்த ‘cili pedas’ உணர்ந்துள்ளார். அது எவ்வளவு உரைப்பானது என்பது அவருக்கு இப்போது தெரியும்.
குற்றச் செயல்கள் மோசமான கட்டத்தை அடைந்துள்ளன என மக்கள் பல ஆண்டுகளாக புகார் செய்து வருகின்றனர். ஆனால் அது ‘கற்பனை’ என நமக்குக் கூறப்பட்டு வந்துள்ளது.
கைரி அவர்களே அந்தப் போலீஸ் புகார் கோப்புக்கள் வைக்கப்படும்
அலமாரிக்குள் போகாது என நான் நம்புகிறேன்.
டத்தோஸ்: நிச்சயமாக குற்றச் செயல்கள் கற்பனை அல்ல. அது உண்மையானது. அரசாங்கம் எவ்வளவு விரைவாக அதனை ஏற்றுக் கொள்கிறதோ அந்த அளவுக்கு பொது மக்களுக்கு நல்லது. அமைச்சர்களும் பாதுகாப்பான சூழலில் வாழலாம்.
கைரி நீங்கள் ஒப்புக் கொண்டது முதல் படி தான். உங்கள் சகாக்களுடைய
மூளைக்கு உரைக்குமாறு நீங்கள் சொன்னால் தான் மாற்றம் ஏற்படும்.
உங்கள் அடிச்சுவட்டில்: வேடிக்கை தான். இந்த நாட்டு நிலவரத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட வேண்டியுள்ளது. நீங்கள் கல்வி கற்றது அவ்வளவு தானா ?
நாம் வாசிக்கிறோம். மற்றவர்களுடைய அனுபவங்களை அறிகிறோம். ஆனால் உங்களுக்கு உங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்க வேண்டியுள்ளது.
எனக்குக் கெட்ட நோக்கம் இல்லை. பிரமுகர்களுடைய வீடுகளை இனிமேல் கொள்ளையர்கள் குறி வைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போது தான் நமது பாதுகாப்புப் பிரச்னைகள் தீரும்.
சிவிக்: ஆகவே குற்றச் செயல் நிலவரம் மோசமாக உள்ளது என்பதை ஒர் அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும். சாதாரண மக்கள் கொள்ளையடிக்கப்படும் போது ,பாலியல் வன்முறைக்கு இலக்காகும் போது, கொல்லப்படும் போது, அவர்கள் கற்பனை என்று சொல்கின்றனர்
தீமோ100: கைரி தமது வீடு கொள்ளையடிக்கப்பட்ட பின்னரே பேசுகிறார். யாரும் காயமடையாததற்கு அவர் முதலில் நன்றி கூற வேண்டும்.
இரண்டாவதாக தில்லுமுல்லு செய்யப்பட்ட புள்ளி விவரங்களைப் பற்றி அதிகம் பேசாமல் தங்கள் வேலைகளை உருப்படியாகச் செய்யுமாறு உயர் நிலைப் போலீஸ் அதிகாரிகளிடமும் உள்துறை அமைச்சரிடமும் நேரடியாகச் சொல்ல வேண்டும்.
போலீசாரைப் பொறுத்த வரையில் எதிரணித் தலைவர்களை மருட்டுவதற்கு போது ஆள் பலம் உள்ளது. ஆனால் மாநகரங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் காவல் காக்க போதுமான ஆள் பலம் இல்லை.
அபாஸிர்: கைரியின் எண்ணம் மாறி விட்டது. பெமாண்டு தலைவர் இட்ரிஸ் ஜாலா மற்றும் புள்ளி விவரங்களை தில்லுமுல்லு செய்யும் அவரது குழுவினரும் மாறுவர் என நான் நம்புகிறேன்.
ஆனால் அவர்கள் ‘மாய உலகில்’ வாழ்வதால் சுதந்திரமாக இயங்கும் திருடர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டினால் தான் அது முடியும் எனத் தோன்றுகின்றது.