‘காட்டுக்குள் இருந்த வெளிநாட்டவருக்கும் ஐசி’

1 icகள்ளத்தனமாக நீல நிற அடையாள அட்டைகளை(ஐசி)  கொடுப்பது மிக பரவலாகவே நடந்துள்ளது. காடுகளில் வேலை பார்த்த வெளிநாட்டவரையும் தேடிப் பிடித்து ஐசி வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.  சாபாவில் குடியேறிவர்கள்மீது விசாரணை  நடத்தும் அரச விசாரணை மன்றத்திடம் (ஆர்சிஐ) இத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்படி ஐசி பெற்றவர்களில் ஒருவர் சூலாவெசியைச் சேர்ந்த மாமிங் சாலெங், 63.  இந்தோனேசிய கடப்பிதழில் சாபா வந்த அவர், கினாபாத்தாங்கானில் மரம் வெட்டும் வேலை செய்தார்.

“மரம்வெட்டும் இடத்தில் இருந்த மேலாளர் அடையாள அட்டை வேண்டுமா என்று கேட்டார், வேண்டும் என்றேன்”, என்று ஆர்சிஐ-இடம் தெரிவித்தார்.

இருவர் வந்து படமெடுத்து பாரங்களைப் பூர்த்தி செய்து விரல் ரேகையைப் பதிவு செய்துகொண்டு சென்றார்கள்.

இரண்டு மாதங்களில் அவர்கள் திரும்பி வந்து நீலநிற ஐசி-யைக் கொடுத்தார்கள் என்றார்.

அதன்பின் மாமிங், தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.

TAGS: