“அந்த மசோதாவை நிறைவேற்ற முயன்று முஸ்லிம் அல்லாதாரின் வெறுப்பை சம்பாதிப்பதற்குப் பதில் அரசாங்கம் மேலும் நீதியான தீர்வு காண மற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும்”
‘குழந்தையை மதம் மாற்றுவதற்கு தாயின் ஒப்புதல் தேவை’
சக மலேசியன்: பெற்றோர்களில் ஒருவர் மட்டும் குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு எதிராக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நியாயமாகவும் துணிச்சலாகவும் பேசியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த மசோதாவை நிறைவேற்றும் அவசரத்தில் அம்னோ, தன்மூப்பாக நடந்து கொள்ள வேண்டாம் என பிஎன் உறுப்புக் கட்சிகள் கூறியதையும் புறக்கணித்துள்ளது.
அந்த மசோதாவை நிறைவேற்ற முயன்று முஸ்லிம் அல்லாதாரின் வெறுப்பை சம்பாதிப்பதற்குப் பதில் அரசாங்கம் மேலும் நீதியான தீர்வு காண மற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும்.
பார்வையாளன்: தாய் இஸ்லாத்துக்கு மாறாததால் குழந்தையை அவரிடமே முகமது நபி திருப்பி அனுப்பிய சம்பவத்தை எடுத்துக் காட்டியதின் மூலம் அன்வார், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள், வீரர்கள், மேம்பாட்டாளர்கள் என மலாய்க்காரர்களுக்குக் காட்டுவதற்கு அம்னோ வகுத்த பெருந்திட்டத்தை குலைத்து விட்டார்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதும் ம் எதிர்க்கட்சிகளைப் பிரிப்பதும் அம்னோ திட்டமாகும்.
எதிர்க்கட்சிகள் ஐக்கியத்துடன் அந்த மசோதாவை எதிர்க்க முடிவு
செய்துள்ளதாலும் முகமது நபி அவற்றின் பக்கம் இருப்பதாலும் அடுத்து என்ன செய்வது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அனாக் பாங்சா மலேசியா: அதுவும் சரியானது அல்ல. தாய் இஸ்லாத்துக்கு மாறி குழந்தைகளும் இஸ்லாத்துக்கு மாறினால் அது நிச்சயம் தந்தைக்கு நியாயமாக இருக்காது.
அதே போன்று முஸ்லிம் தந்தை பௌத்த மதத்திற்கு மாறும் போது பிள்ளைகளும் அவரைப் பின்தொடருவது நியாயமா ?
ஆகவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே, முஸ்லிம் அல்லாதாருடைய நிலையில் உங்களை வைத்து அது நியாயமா எனப் பாருங்கள்.
ஜெரோனிமோ: அன்வார் அவர்களே கவனமாகப் பேசுங்கள். தந்தை முஸ்லிமாக இல்லாமல் தாய் முஸ்லிமாக இருந்தால் எப்படி இருக்கும் ?
அப்போது குழந்தை இயல்பாகவே முஸ்லிமாகி விடுமா ? மதம் என்பது
மனுக்குலத்துக்கு நம்பிக்கையைத் தர வேண்டும். இது போன்ற துயரங்களை அல்ல.
நான் விரும்புவது: பெற்றோர்களில் ஒருவர் மற்றவருடைய ஒப்புதல் இல்லாமல் குழந்தையை மதம் மாற்றுவது மனித நேயமற்றது. நாம் அதனை ஏற்றுக் கொண்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
சிவிக்: ஒரு பக்கம் இஸ்லாமிய விவகாரங்கள் மீது முஸ்லிம் அல்லாதவர்களுடன் (டிஏபி தலைவர் லிம் குவான் எங்) முஸ்லிம்கள் (அன்வாரும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும்) விவாதிக்கும் நிலை காணப்படுகின்றது.
அடுத்த பக்கம் தாங்கள் விரும்பும் வழியில் இஸ்லாத்தை வழி நடத்துவதற்கு தனக்கு ஏக போக உரிமை உள்ளதாக அம்னோ கூறிக் கொள்கிறது (அதனால் முஸ்லிம் அல்லாதாரின் உரிமைகள் மீறப்படுகின்றன) மஇகா, மசீச, கெரக்கான் ஆகியவை சொல்வது எடுபடவே இல்லை. நீங்களே முடிவு செய்யுங்கள்.
அடையாளம் இல்லாதவன்#40538199: அந்த மதம் மாற்ற மசோதாவை அன்வார் ஆதரிக்க மறுத்தால் அவரையும் வேறு நாட்டில் குடியேறுமாறு உத்துசான் மலேசியா சொல்லுமா ?