மலேசியாவில் ‘அரபு எழுச்சி’ பாணியில் ஆர்ப்பாட்டம் நிகழ்வதற்குக் காரணமே இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
மலேசியா கடந்த 55 ஆண்டுகளாக அமைதியையும் நிலைத்தன்மையையும் அனுபவித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் லண்டனில் பிபிசி ஒலிபரப்பு நிறுவனத்துக்கு பேட்டியளித்த போது அவ்வாறு கூறினார்.
அத்துடன் மக்கள் நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும் கண்டுள்ளனர். நாட்டின் 28 மில்லியன் மக்களும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கும் நிறைய அம்சங்கள் உள்ளன என்றார் அவர்.
எகிப்தில் அரசாங்கத்துக்கு எதிராக நிகழும் ஆர்ப்பாட்டத்தைப் போன்று
மலேசியாவிலும் நிகழக் கூடும் என்ற அச்சம் அவருக்கு உள்ளதா என அந்தப் பேட்டியின் போது நஜிப்பிடம் வினவப்பட்டது.
மலேசியச் சூழ்நிலையில் அரசாங்கத்தை மாற்றாமல் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவர் மேலும் சொன்னார்.