பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் என்பது ஏற்கனவே ‘முடிவான சட்டம்’ என்கிறது ஒர் அமைப்பு

mosque2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின்  107வது பிரிவுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மீது வழக்குரைஞர்கள்  மன்றம் பொது மக்களை தவறாக வழி நடத்துவதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள்  சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சட்ட ரீதியாக திருத்தங்கள் செய்யப்படாத வரையில் ஒரு குழந்தையை மதம்  மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் போதுமானது என்பது  ஏற்கனவே ‘முடிவான சட்டம்’ என அது கூறியது.

குழந்தைகளை பெற்றோர்களில் ஒருவர் மட்டும் தன்மூப்பாக மதம் மாற்றுவது  அரசமைப்புக்கு முரணானது என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டாபர்  லியோங் கூறியுள்ளது தவறானது என்று அந்தச் சங்கத்தின் தலைவர் ஜைனுல்  ரிஜால் அபு பாக்கார் இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.