லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (Lamp) தனது அணுக்கதிரியக்கக்
கழிவுகளை நிரந்தமாக வெளியேற்றுவதற்கான வசதிகளை தயார் செய்யத் தவறி விட்டதால் அதற்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை அனுமதி (TOL) ரத்துச் செய்யப்பட வேண்டும் என குவாந்தான் பிகேஆர் எம்பி பூஸியா சாலே கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தத் தொழில் கூடத்துக்கு வழங்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதி நேற்று காலவதியாகி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், அணுக்கதிரியக்கக் கழிவுகளை நிரந்தமாக வெளியேற்றுவதற்கான வசதிகளை அது பட்டியலிட வேண்டும் என்பது அந்த அனுமதிக்கான நிபந்தனைகளில் ஒன்று எனத் தெரிவித்தார். ஆனால்
அதனை லைனாஸ் செய்யத் தவறி விட்டது என்றார் அவர்.
“அதனால் அந்த அனுமதி ரத்துச் செய்யப்பட வேண்டும் என நாங்கள்
விரும்புகிறோம்,” என பூஸியா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.