சபாஷ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸாலி இஸ்மாயிலுக்கு ஊதியமாக 33.4 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டது மீது கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த ஊதியத் தொகை ‘நேர்மையற்றது, பொறுப்பற்றது’ என அவர் வருணித்தார்.
20 மில்லியன் ரிங்கிட் ஒய்வுக் கொடை உட்பட 2012 நிதி ஆண்டுக்கு
ரோஸாலிக்கு வழங்கப்பட்ட ‘மித மிஞ்சிய’ ஊதியத்திற்கான நியாயம் குறித்து அவர் வினவினார்.
பூஞ்சாக் நியாகா (சபாஷ் நிறுனத்தில் பெரும்பான்மை பங்குதாரர்) தனது
இயக்குநர்களுக்கு என்ன ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது அதன் சட்டப்பூர்வ உரிமை என்றாலும் தண்ணீர் பொது மக்களுக்கு கொடுக்கப்படும் நன்மை என்பதைக் கருத்தில் கொள்ளும் போது அது நேர்மையான பொறுப்பான முடிவு அல்ல என அவர் இன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ரோஸாலி நிர்வாகத்தில் சபாஷ் அடைவு நிலையையும் சார்லஸ் குறை கூறினார்.
i
பாரிசான் ஆட்சி மக்கள் பணத்தை பாழாக்கும் ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்