2013 இஸ்லாமிய சட்ட நிர்வாக(கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதாவுக்கு சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அறிந்ததே. இப்போது இன்னொரு அமைச்சரும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பிரதமர்துறை அமைச்சரான பால் லவ் (வலம்), பெற்றோரில் ஒருவர் 18-வயதுக்குக் குறைந்த தம் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதமாற்ற அனுமதிக்கும் 107பி சட்டவிதி அடிப்படையில் நியாயமற்றது என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“அது பெற்றோரில் ஒருவருக்கு அவரின் பிள்ளைகள்மீதுள்ள உரிமையை மறுக்கிறது”, என்றாரவர்.
மேலும், பிள்ளைகளின் பராமரிப்பு என்று வரும்போது பெற்றோரில் ஒருவர் தம் வசமே பிள்ளைகளை வைத்துக்கொள்ளவும் இச்சட்டவிதி அனுமதிக்கிறது.
லவ்-இன் கருத்தையே மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கும் எடுத்துரைத்தார். அரசாங்கம் சட்டமசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் பின்னூட்டம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மத மாற்று பிரச்சனை சுமுகமாக தீர்க்க வில்லை என்றால் அடுத்த பொதுதேர்தலில் ம இ க காணமல் போய்விடும்