‘கூட்டரசு அரசாங்கம் நியமித்த கிராமக் குழுக்கள் சட்டவிரோதமானவை’

malaysialogoபினாங்கு மாநிலத்திற்கு கூட்டரசு அரசாங்கம் நியமித்துள்ள 142 கிராம  மேம்பாட்டு பாதுகாப்புக் குழு (JKKP) உறுப்பினர்கள் தேவை இல்லை என முதலாவது துணை முதலமைச்சர் ரஷீட் ஹான்சோன் கூறுகிறார்.

அந்தக் குழு உறுப்பினர்கள் செயல்படுவது சட்ட விரோதமானது என்பதோடு   தொந்தரவாகவும் இருக்கிறது என அவர் சொன்னார்.

காரணம் அவர்களை மாநில அரசாங்கம் நியமிக்கவில்லை என்றார் அவர்.

அத்துடன் அவர்கள் பினாங்கில் ஏற்கனவே இயங்கும் 285 JKKK (மாநில
அரசாங்கம் நியமிக்கும் கிராம மேம்பாட்டு, பாதுகாப்புக் குழுக்கள்) (JKKP என்பது  கூட்டரசு அரசாங்கம் நியமிக்கும் குழுக்களாகும்)பணிகளையே செய்கின்றனர்.

“நீங்கள் என்னைக் கேட்டால் பிஎன் தொகுதிகளுக்கு எங்கள்
ஒருங்கிணைப்பாளர்கள் தேவை இல்லை எனச் சொல்வதைப் போல அந்த கூடுதல்  JKKP-க்கள் தேவை இல்லை.”

ரஷீட் நேற்று மாநிலச் சட்டமன்றத்தில் நிருபர்களிடம் பேசினார்.

TAGS: