‘அண்மையில் விளையாட்டு அமைச்சர் வீடு கொள்ளையடிக்கப்படும் வரையில் குற்றச் செயல் விகிதம் குறைவாக இருந்தது. கேபிஐ என்ற அடைவுநிலைக் குறியீடும் நன்றாக இருந்தது. இப்போது எதுவும் சரியில்லை’
தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது. அது இன்னும் தேவை என்கிறார் ஸாஹிட்
வெர்சே: உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவர்களே, உங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்தவரும் நடப்பு தேசியப் போலீஸ் படைத் தலைவரும் குற்ற விகிதம் குறைவதாக மக்களிடம் பொய் சொன்னார்களா அல்லது நீங்கள் பதவிக்கு வந்ததும் குற்ற விகிதம் கூடி விட்டதா என்பதைத் தயவு செய்து எங்களுக்குச் சொல்லுங்கள்.
விவேகம்: ஸாஹிட் என்ன பேசுகின்றார் ? அண்மையில் விளையாட்டு அமைச்சர் வீடு கொள்ளையடிக்கப்படும் வரையில் குற்றச் செயல் விகிதம் குறைவாக இருந்தது. கேபிஐ என்ற அடைவுநிலைக் குறியீடும் நன்றாக இருந்தது. இப்போது எதுவும் சரியில்லை. அந்த நிலை எப்படி வந்தது ?
காரணம் பிஎன் எல்லா விஷயங்களையும் அமுக்கி வைத்தது. இப்போது அவை எல்லாம் நாற்றமடிக்கின்றன. எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றது. நிபுணர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு அது அனுமதிக்க வேண்டும். அரசியல்வாதிகள் நிலைமையைக் கண்காணித்து உருப்படியான யோசனைகளை மட்டும் சொல்ல
வேண்டும். கதைகளைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பணத்தை வீணாக்கவும் கூடாது.
????: “EO என்ற அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் குற்ற
விகிதம் கூடியுள்ளதாகக் கூறப்படுவது பற்றி ஸாஹிட் பேசுகின்றார். ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவிக்கு வந்ததலிருந்து குற்ற விகிதம் குறைந்து வருவதாக போலீஸ் கூறியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
அத்துடன் குற்ற விகிதம் கூடுவதாக சில ஊடகங்கள் சொல்வது கற்பனை என்றும் போலீஸ் தெரிவித்தது. எது உண்மை ?
டேனிஒன்: உயர்வான குற்ற விகிதம் கற்பனை அல்ல கூடுகிறது என்பதை அவர்கள் இப்போது ஒப்புக் கொள்கின்றனரா ? அப்படி என்றால் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் சொன்னது பொய்யா ? அரசாங்கம் தயாரித்த புள்ளிவிவர அறிக்கை ஜோடிக்கப்பட்டதா ? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.
ஏரியஸ்46: அமைச்சர் அவர்களே, குற்ற விகிதம் கூடியதற்கு அவசர காலச் சட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டது மீது ஏன் பழி போட வேண்டும் ?
கொள்ளப்பட்டதால் சட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அமலாக்கப்பட்டால் எத்தனை சட்டங்களும் குற்றங்களை தடுக்கப் போவதில்லை. தேச நிந்தனைச் சட்டத்தைப் பொறுத்த மட்டில் அதனை தொடர்ந்து வைத்திருப்பதற்கு நீங்கள் சொல்லும் காரணம் விவாதத்திற்கு உரியது. எதிர்க்கட்சிகளுடன் சம்பந்தப்பட்ட போராளிகள் மீது மட்டும் அதுவும் மேலோட்டமான காரணங்களுக்காக அது பயன்படுத்தப்படுவது ஏன் ?
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்ததற்காக மலாய்க்காரர் அல்லாதாரை மருட்டிய முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா, தாய்மொழிப் பள்ளிகளை மூட விரும்பும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட், உத்துசான் மலேசியா அடிக்கடி வெளியிடும் இனவாதச் செய்திகள், தமது தோல்விகளுக்கு மலாய்க்காரர் அல்லாதார் மீது தொடர்ந்து பழி போடும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்
போன்றவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ளனர். அவர்களைப் பற்றி என்ன சொல்வது ?
ஆட்சியாளர்களை வெளிப்படையாக மீறியவர்கள் மீது வழக்குப்
போடப்படவில்லை. சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு அடையாளக் கார்டுகளை விற்பனை செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆகவே எங்கே கோடு வரையப்பட்டுள்ளது அமைச்சர் அவர்களே ?. ஆட்சியாளர்களுக்கு மருட்டல் எனக் கருதப்படுகின்றவர்களைப் பிடிப்பதற்கு தேச நிந்தனைச் சட்டம் வைத்திருக்கப்படுகின்றது என்று தான் எண்ண வேண்டும்.
சிந்தித்து வாழுங்கள்: தேச நிந்தனைச் சட்டம் இல்லாவிட்டால் ‘எதுவும் இருக்காது’ என ஸாஹிட் சொல்கிறார். எதற்காக இருக்க வேண்டும் ? எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பிஎன் -னுக்கு எதுவும் இருக்காதா ? மக்கள் உண்மைகளை அம்பலப்படுத்துவதிலிருந்து பிஎன் -னைப் பாதுகாக்க எதுவும் இருக்காதா ? உண்மையில் பிஎன் ஊழலும் பொய்களும் தான் இல்லாமல் போகும்.
குற்ற செயல் கூடுதோ இல்லையோ ,உனக்கு வாய் திமிரு கூடி போயிருக்குடா!
கவனம் ஜாஹிட் ஹமிடி அவர்களே ,உங்கள் வீட்டிலும் புகுந்து கியாரிசையை காட்ட போகிறார்கள் ! காவற்துறையை சீர் செய்வீர்களா?
இவனுடைய லொள்ளு கூடிவிட்டது !