வறுமையும் அறியாமையும் இரட்டை பிஎன் ஆயுதங்கள்

poor“அவர்களை அடிப்படையில் ஏழையாகவும் தகவல் அறியாதவர்களும்  வைத்திருப்பதே அதுவாகும். அப்போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும்  வாங்கிக் கொள்ளலாம்”

மக்கள் வாங்கப்படுவதற்காக ஏழையாக வைத்திருக்கப்படுகின்றனர்

வெர்சே: சரவாக் சுதேசி மக்களும் நாடு முழுவதும் தகவல் அறியாத மக்களும்  வறுமை, அறியாமை என்ற வலையில் சிக்கியுள்ளதை அனைவரும் அறிவர்.  தேர்தல் காலத்தில் அன்பளிப்புக்களை வழங்கும் ஊழல்  அரசியல்வாதிகளுக்கு/கட்சிக்கு அவர்கள் வாக்களிக்கின்றனர்.

மரியாதைக்குரிய கல்வியாளர்கள் சமூகத்தை விழிக்கச் செய்வதற்கு இது போன்ற  செய்திகள் பெரிதும் உதவும். இறுதியில் சில சாதகமான விளைவுகளும் ஏற்படலாம்.

பூமிஅஸ்லி: மக்கள் ஏழைகளாக இருக்கும் வரையில் அவர்களை வாங்க முடியும்  என்பது உண்மையே. அந்த வியூகமும் சமய விவகாரங்களைத் தூண்டி விடுவதும்  ஏழை மக்களை திசை திருப்பி விடுகின்றன, அதனை அரசியல்வாதிகள்  பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உங்கள் அடிச்சுவட்டில்: துல்லிதமாகச் சொன்னால் அது வறுமை அல்ல.  வறுமையும் அறியாமையுமே மக்களை அரசாங்கத்தைச் சார்ந்திருக்க செய்கின்றது.

கல்வி கற்காதது அல்லது அரை வேக்காடு கல்வி முறை (உண்மையில் ஊட்டுவது)  ஆகியவற்றால் மக்கள் அரசாங்கத்திடமிருந்து நல்ல வாழ்க்கையைக் கோரும்  தங்கள் உரிமைகளை அறியாதவர்களாக்கி விடுகின்றது.

வறுமை என்பதை விட அறியாமையே ஒரு பொட்டலம் மீ கூனுக்கும் ஒரு டின்  மைலோவுக்கும் தங்கள் வாக்குகளை அவர்கள் விற்க வழி வகுத்து விடுகின்றது.

ஒரு டின் மைலோவைக் காட்டிலும் தங்களுக்கு சிறந்தது கிடைக்கும் என்றால்  வறுமை இருந்தாலும்  மைலோ டின்னை ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்  போகிறார்கள். மக்களுக்கு உதவுவது அரசின் கடமை என்பதை அவர்கள்  அறியாமல் இருக்கின்றனர்.

நல்ல மனிதர்கள்: அவர்களை அடிப்படையில் ஏழையாகவும் தகவல்
அறியாதவர்களும் வைத்திருப்பதே அதுவாகும். அப்போது நீங்கள் எப்போது  வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

தலை வேட்டைக்காரன்: பிரிட்கெட் வெல்ஷ் சரியாகச் சொன்னீர்கள். தாங்கள் எந்த  நிலையில் வைத்திருக்கப்படுகின்றோம் என்பதை மக்கள் உணர நீண்ட காலமாகும்.  அந்த ஆட்டத்தில் சரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட் மிகவும் வல்லவர்.

அங்கு சுதேசிகள் ஏழைகளாக வைத்திருக்கப்படுகின்றனர். சிறிது காலத்திற்கு  அவர்களை அமைதியாக வைத்திருக்க எலும்புத் துண்டுகள் அவ்வப்போது  வீசப்படும்.

இருண்ட சுரங்கப் பாதையில் இன்னும் ஒளி தெரியாததே அச்சமளிக்கும்
விஷயமாகும்.

டுயூடொனல்: பல தசாப்தங்களாகத் தொடரும் பண அரசியல் அரசாங்க
வெகுமதிகளைச் சார்ந்திருக்கு தலைமுறையை உருவாக்கி விட்டது. அதனை  உடைக்க வேண்டும்.

ரிக் தியோ: இந்த நிலை தொடருவதற்கு வறுமையும் அறியாமையுமே காரணம்.  கிராமப்புற மக்கள் தொடர்ந்து பிஎன் -னுக்கே வாக்களிப்பார்கள்.

சமநிலை98: இனம், சமயம், வறுமை (சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாதது)  ஆகியவை பிஎன் ‘நிரந்தர வைப்புத் தொகைகள்’ உறுதியாக இருப்பதற்கான பிஎன்  ஆயுதங்கள்.

அமைதி விரும்பி: பிஎன் வியூகத்தைத் திறந்த புத்தகம் போல பிரிட்கெட் வெல்ஷ்  வாசிக்கிறார். அது உண்மையே. மக்களை ஏழைகளாகவும் அறியாதவர்களாகவும்  சார்ந்திருப்பவர்களாகவும் வைத்திருங்கள். நீங்கள் சல்லிக் காசுக்கு அவர்கள்  வாக்குகளை வாங்க முடியும்.

TAGS: