உத்துசான் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டது

1 nizarஉங்கள் கருத்து  ‘உயர்நெறி கொண்ட செய்தித்தாளாக, பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் செய்தித்தாளாகத்தானே இருந்தாய்? அது என்னவாயிற்று? அந்தக் கடந்தகால பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொள்ளவில்லையா நீ?

உத்துசானுக்கு எதிரான வழக்கில் முன்னாள் பேராக் எம்பி வெற்றி

பெர்ட் டான்: நீதிமன்றம் ரிம 250,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது.

உத்துசான் மலேசியா பிரசுரிக்கும் எதையும் நாம் நம்பக் கூடாது.

தூனார்மி: இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட நீதிபதி ரோஸ்னாய்னி சவுப், அக்கட்டுரையில் நிஜார் டிவிட்டரில் சொல்லாததையெல்லாம் கட்டுரையாசிரியர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உத்துசானிடம் உயர்நெறி துளியும்  இல்லை என்பதைக் காட்ட இது ஒன்றே போதும்.

ஆரிஸ்46: யார் வேண்டுமானாலும் உத்துசான் மீது வழக்கு தொடுக்கலாம். ஆனால், அது மாறாதய்யா, மாறாது.

பீமாய்2டாங்டு:  அம்னோவின் குரலாகவும் பரப்புரைக் கருவியாகவும் செயல்படும் உத்துசான் அவதூறு வழக்குகளுக்காக அடுத்தடுத்து இழப்பீடுகளைக் கொடுத்து வந்துள்ளது.

ஆனால், உள்துறை அமைச்சின் கரம் மட்டும் அதன்மீது படவே படாது. அதனால், அது இனங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்  பொய்மூட்டைகளையும் அரைவேக்காட்டு உண்மைகளையும் அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கும்.

மூண்டைம்:  உத்துசான், பொய்யுரைப்பதையும் அவதூறு கூறுவதையும் நிறுத்துவாயா, மாட்டாயா?

உயர்நெறி கொண்ட செய்தித்தாளாக, பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் செய்தித்தாளாகத்தானே இருந்தாய்? அது என்னவாயிற்று? அந்தக் கடந்தகால பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொள்ளவில்லையா நீ?

ஓ மை கோட்!: உத்துசான் பொய்களை இட்டுக்கட்டுவது இது முதல்முறையல்ல. அதற்கெதிராகக் கொண்டுவரப்பட்ட அவதூறு வழக்குகள் எல்லாவற்றிலுமே அதற்குத் தோல்விதான்.

ஆமாம், உள்துறை அமைச்சர் ஏன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருக்கிறார்? அது அம்னோவின் குரலாக இருக்கிறதே, அதனாலா?