உள்துறை அமைச்சருக்கும் விதி விலக்கு இல்லை

zahid‘குண்டரைப் போன்ற நடத்தைக்காக அகமட் ஸாஹிட் மீது ஏன் குற்றம்  சாட்டப்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய மாட் ஜைன் -னுக்கு மிக்க  நன்றி’

ஸாஹிட் மீது ஏன் இன்னும் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) குற்றம் சாட்டவில்லை என வினவுகிறார் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி

கலா: சமமான சட்டப் பாதுகாப்பு விஷயத்தில் முரண்பாடு நிலவுவதை
கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் மாட் ஜைன்  இப்ராஹிம் சரியாக விளக்கியுள்ளார்.

1997ம் ஆண்டு அப்போதைய துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமைத்
தாக்கியதற்காக முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர்  மீது குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட வேளையில் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஏன் பிடியிலிருந்து  விடுபட அனுமதிக்க வேண்டும் ?

அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டுக்கு விதி விலக்கு ஏதுமில்லை. நாம்  அனைவரும் எதிர்நோக்கும் அதே சட்டத்தை அவரும் எதிர் கொள்ள வேண்டும்.

பார்வையாளன்: மாட் ஜைன் அந்த வழக்கை அன்வார் தாக்கப்பட்ட விஷயத்துடன்  ஒப்பீடு செய்து தெளிவாக விளக்கியுள்ளார்.

அம்னோ கட்டுக்குள் உள்ள அரசாங்கத்தில் சில அம்னோ/பிஎன்
அரசியல்வாதிகளும் அவர்களுடைய அமலாக்க நிறுவனங்களும் சட்டத்திற்கு  மேலானவர்கள் என்பதைப் போல நடந்து கொள்கின்றனர். யாரும் தங்களைத்  தொட முடியாது என்ற எண்னத்துடன் அவர்கள் எந்தக் குற்றத்தையும்  செய்கின்றனர்.

இறைத் தூதன்: அந்த விஷயத்தை அம்பலப்படுத்திய மாட் ஜைனுக்கு என்  வணக்கம். சட்டம் எல்லா குடிமக்களுக்கும் பொதுவானது.

கிங்பிஷர்: மாட் ஜைன் நன்றாகச் சொன்னீர்கள். ஸாஹிட்டுக்கு எதிராக
சட்டத்துறைத் தலைவர் (ஏஜி)கிரிமினல் குற்றச்சாட்டைத் தொடுப்பதற்காக  மலேசியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமது பதவியின் நேர்மையை நிலை  நிறுத்துவதாக ஏஜி வாக்குறுதி எடுத்துக் கொண்டுள்ளார்.

அடையாளம் இல்லாதவன் சாம்ராஜு: குண்டரைப் போன்ற நடத்தைக்காக அகமட்  ஸாஹிட் மீது ஏன் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய  மாட் ஜைன் -னுக்கு மிக்க நன்றி.

நல்ல நாள்: சட்ட அமலாக்கத்தைப் பொறுத்த வரையில் அம்னோபுத்ராக்களின்  முரண்பாடுகளையும் இரட்டை வேடத்தையும் தொடர்ந்து மாட் ஜைன் சுட்டிக்  காட்டி வருகிறார்.

அவர்கள் அமைதியாக இருப்பது பெரிய விஷயமல்ல. கையும் களவுமாக  பிடிபட்டால் அமைதியாக இருப்பது தான் அவர்கள் வழக்கம்.

ஒடின்: மாட் ஜைன் ஏற்கனவே ஏஜி மற்றும் சிலர் மீது கடுமையான
குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

இது வரை யாரும் மாட் ஜைன் -னுக்கு எதிராக ஒரு ரிங்கிட் கூடக் கோரி
அவதூறு வழக்குப் போட்டதில்லை. அதனால் ஸாஹிட் விவகாரத்தில் ஏஜி  கிரிமினல் வழக்கு ஏன் சிவில் வழக்கு போடுவார் என்று கூட நாம் எதிர்பார்க்க  முடியாது.

TAGS: