உள்ளூர் தேவாலயங்கள் அவற்றின் சமயக் கல்வியிலும் வழிபாட்டிலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நடத்திவரும் பரப்புரைக்கு மலேசியாவுக்கான வத்திகன் தூதர் ஜோசப் மரினோ தெரிவித்துள்ள ஆதரவுக்கெதிராக சில முஸ்லிம் என்ஜிஓ-கள் கொதித்து எழுந்திருப்பது கண்டு கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங்(இடம்) அதிர்ந்து போயுள்ளார்.
ஜத்தி, பெர்காசா ஆகிய அமைப்புகள் அவர் ஏழு நாள்களுக்குள் தம் கருத்துகளை மீட்டுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் அரசாங்கம் அந்தத் தூதரகத்தை மூட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
“என்ஜிஓ-கள் மிரட்டிப் பார்க்கின்றன. அது பொறுப்பற்ற பேச்சு”, என்று ஆயர் கூறினார்.
நடை முறைத் தமிழில் “போடா! போடா! புண்ணாக்கு!” என்று ஒரு வார்த்தை சொல்லுவார்கள்! அது தான் ஞாபத்திற்கு வருகிறது. சும்மா “டெஸ்ட்” பண்ணிப் பார்க்கிறார்கள்! பார்க்கட்டுமே!
மனிதனை நல்வழி படுத்தும்பொருட்டு குருமார்கள் சமையத்தை உருவாக்கினார்கள்.அதை அறிந்துகொள்ளமுடியாத சிலர் இறைவனின் பெயருக்கே இழிவை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி ஆட்சியாளர்களுக்கு தலை வலியை உண்டாக்குகிறார்கள் அறிவிலிகள்.