ஷாஹிடான் எந்த மை விநியோகிப்பாளரை நீங்கள் பாதுக்காக்கின்றீர்கள் ?

shahidan-kassim“மை விநியோகிப்பாளரை ரகசியமாக வைத்திருந்து எதிர்காலத்தில் பயன்படுத்த  ‘சேவகர் காரணம்’ இல்லாத வரையில் அவரது பெயரை வெளியிடுவதில் என்ன  தவறு ?”

அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைத்திருக்கப்படுவதை அமைச்சர் ஆதரிக்கிறார்

டுடெனோ: மினி மார்க்கெட்டில் ‘உணவுப் பொருளில் சேர்க்கப்படும் அந்த சாயம்’  கிடைக்கும் போது மக்கள் ஏன் அந்த  விநியோகிப்பாளரிடமிருந்து வாங்குவதற்கு வரிசையாகக்  காத்திருக்க வேண்டும் ?

லிம் சொங் லியோங்:நாங்கள் தெரிவித்தால் அவர்கள் அந்த மையை வாங்க  வரிசையாக நிற்பார்கள். பின்னர் தங்கள் விரல்களில் மையை தோய்த்து  விடுவார்கள். அடுத்து அவர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று என்னிடம் மை  உள்ளது. நான் அடையாளக் கார்டைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை  என்பார்கள்,” என்றார் ஷாஹிடான்.

அழியா மை பற்றியும் தேர்தல் குறித்தும் வெளியிடப்படும் அபத்தமான
கதைகளுக்கு எல்லாம் உச்சக் கட்டமாக இது அமைந்துள்ளது. அந்த மையில்  விரலை நனைத்து விட்டு வாக்களிக்கும் தகுதியிலிருந்து தம்மை விலக்கிக் கொள்ள  எந்த வாக்காளராவது எண்ணுவாரா ?

வாக்காளர் ஒருவர் தமது அடையாளக் கார்டை காண்பிப்பதிலிருந்து அந்த மை  விலக்கு அளிக்கவில்லை. மீண்டும் அவர் வாக்களிப்பதை தவிர்க்கவே அந்த மை  பயன்படுத்தப்படுகின்றது. நம்மை முட்டாள் என அந்த அமைச்சர் நினைத்துக்  கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் தான் முட்டாள்.

அப்பும்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எப்படி, ஏன் தமது அமைச்சர்களை தேர்வு  செய்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான்  அவர் சிறந்தவராகத் தோற்றமளிக்க முடியும்.

ஸ்விபெண்டர்: முந்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் தான்
மூளையில்லாதவர்கள் என நாம் எண்ணியிருந்தோம். ஆனால் நடப்பு
அமைச்சர்களும் அதே போன்று அபத்தமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஜேம்ஸ்1067: விநியோகிப்பாளருக்கு பொதுப் பணத்தை கொடுத்து விட்டு தரம்  குறைந்த மையை வழங்கிய அவரை பாதுகாக்கும் இந்தத் தலைவர்களுக்கு  வெட்கமே இல்லை.

வீரா: அபத்தமானது ஷாஹிடான். உங்கள் முட்டாள்தனம் எனக்கு வியப்பை  அளிக்கிறது. அழியா மை ஊழல் காரணமாக இடைத் தேர்தலில் பயன்படுத்த  வேறு விநியோகிப்பாளரிடமிருந்து மையை வாங்கப் போவதாக தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது.

ஆகவே மை விநியோகிப்பாளரை ரகசியமாக வைத்திருந்து எதிர்காலத்தில்  பயன்படுத்த ‘சேவகர் காரணம்’ இல்லாத வரையில் அவரது பெயரை  வெளியிடுவதில் என்ன தவறு ?.

பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் அவர்களே, விநியோகிப்பாளர் பெயரை  நாடாளுமன்றத்தில் தெரிவியுங்கள். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார்  இப்ராஹிமிடம் மில்லியன் கணக்கான ரிங்கிட் இருப்பதாக அண்மையில்  மக்களவையில் ஒரே கெரக்கான் எம்பி அண்மையில் செய்ததைப் போல நீங்கள்  100 விழுக்காடு உறுதியாக இல்லா விட்டாலும் உங்களுக்கு நாடாளுமன்றப்  பாதுகாப்பு உண்டு.

வீரா: நல்ல கருத்து. அவர்கள் யாரைப் பாதுகாக்கின்றார்கள் ? சேவகர்கள் யாரும்  சம்பந்தப்பட்டுள்ளனரா ? விலை நியாயமானதா ?

அவர்கள் உண்மையில் மையை வாங்கினார்களா அல்லது சொந்தமாக தயாரித்துக்  கொண்டார்களா ? உறவினர் ஒருவர் அல்லது மைத்துனர் அல்லது அண்டை  வீட்டுக்காரர் நிறுவனத்துக்கு அவர்கள் அதனைக் கொடுத்தார்களா ?

My4Hope: பிஎன் அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகளைத் தொகுத்து  வெளியிட்டால் உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் வெளியிடும் நகைச்சுவைகள்  பட்டியலில் நிச்சயம் முதலிடத்தைப் பெறும்.

TAGS: