அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர் , மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான் என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறார் கா. ஆறுமுகம்.
1998-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்வி அமைச்சால் தொடங்கப்பட்ட இந்த மெட்ரிகுலேஷன் திட்டம் பூமிபுத்ரா மாணவர்களுக்கானது. அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ துறைகளில் அவர்களை அதிகப்படியாக நுழைப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், 2003-ஆம் ஆண்டு முதல் 10 விழுக்காட்டு கோட்டா மற்ற இனங்களுக்குத் திறன் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் அனைவருக்கும் என்ற கமலநாதனின் அறிக்கை இதற்கு முரண்பாடானது என்ற சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான ஆறுமுகம், “மெட்ரிகுலேஷன் நுழைவு மட்டுமல்ல, பல்கலைக்கழக நுழைவுகளிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் கொள்கை அளவிலான மாற்றம் வேண்டும், ஆனால் அது நமக்கு கிடைக்காது” என்கிறார்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் அவர்களின் கேள்விக்குக் கடந்த 27.7.2013-இல் எழுத்து பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர், 2013-இல் இந்தியர்களுக்கு 1,500 இடங்கள் வழங்கப்பட்டதிற்கான காரணம் பிரதமர் 27.2.2012-இல் அளித்த வாக்குறுதியே காரணம் என்கிறார்.
ஒட்டு மொத்தமாக அரசாங்க அமைப்பு முறைகளையும் பணித்துறைகளையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள அம்னோ அதன் இனவாத பிடியை எளிதில் விடாது. நமக்கான தீர்வுகள் சலுகை அடிப்படையிலும் தவணை முறையிலும்தான் கிடைக்கும். அவைக்கூட எதிர்வினை போராட்டம் இருக்கும்வரையில்தான் உண்டு என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.
தேர்தலில் வாக்களித்த படி இந்திய மாணவர்களுக்கு ஒதுக்க பட்ட இடத்தை வழங்குவதில் அரசாங்கம் ஏன் முரண்பாடாக உள்ளது .நாங்கள் என்ன மற்ற இனத்தவர்க்கு ஒதுக்க பட்ட உரிமையையா கேட்கிறோம் .கல்வி கட்பதுக்கே போராட வேண்டுமா .இந்திய கட்சி தலைவர்கள் என்ன இன்னும் விழிக்க வில்லையா .
இரண்டு விசயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது, அரசாங்கமும் அம்னோவும் இந்தியர்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதையும் மீறி சில நெருக்கதில்களினால் கொடுக்கப்படும் சிறு சலுகைகளும் MIC எனும் சமுதாயa பற்றறத்a சுயநலவாதிகளாl ilanthu வருகிண்ட்ற்றோம்.
சென்ற வியாழக்கிழமையில் வெளிவந்த மேற்கல்வி அமைச்சின் தகவல்படி(யு.பி.யு 2) வெறும் 1,824 மாணவர்களுக்கு மட்டும் தான் அரசு பல்கலைகழகத்தில் மேற்கல்வி தொடர வைப்பு வழங்கப்பட்டது.சென்ற ஆண்டுகளில், 2.5 ஜி.பி.ன்.கே எடுத்த சில இந்திய மாணவர்களுக்கும் வைப்பு வழங்கப்பட்டது அனால் இந்த ஆண்டு 2.9 ஜி.பி.ன்.கே கொண்டிருந்த மாணவர்களுக்கும் கூட வைப்பு வழங்கப்படவில்லை.பொது தேர்தல் முடிந்து விட்டது அல்லவா.. நம் இந்திய மாணவர்களின் நிலை பரிதாபம்… இந்த நிலையை களைய யாரவுது முயற்சி எடுப்பாரா..? மாஇகாவின் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்.. மாஇகா தலைவர்களின் மௌனம் நீடிக்கிறதே..
உன்னா நிலை போரட்டம் நடதினாலும் உறுப்பினர் அல்லாத கட்சி தலைவர்கள் மௌனசமியகதான்\ இருப்பார்கள்
அவர்களுடைய சுகபோக வாழ்க்கைதான் முக்கியம் .எங்கேயோ\தவறு நடக்கிறது .
அதுதான் தெரிஞ்ச விசியமாசே .
கட்டுரை ஆசிரியர் என்ன நம்ம ஊரின்ஈரு வானொலிகளில் ஏதோ ஒன்றில் பணி ‘புரிந்தவரோ’? நுலைவு நுலைவு என்கிறாரே…
கட்டுரை ஆசிரியர் என்ன நம்ம ஊரின் இரு வானொலிகளில் ஏதோ ஒன்றில் பணி ‘புரிந்தவரோ’? நுலைவு நுலைவு என்கிறாரே…என்ன ‘எலவோ?’
எழுத்துப் பிழை தானே கருத்துப் பிழை யல்லவே ஏற்றுக் கொள்வோம்.
எழுத்துப் பிழை தானே கருத்துப் பிழை யல்லவே ஏற்றுக் ொள்வோம்.
எழுத்துப் பிழை தானே கருத்துப் பிழை யல்லவே ஏற்றுக் கொள்வோம்
தவறுதல் தனி மனித இயல்பு தானே…நான் (குறை )சொல்ல வந்தது ஆசிரியரை அல்ல மாறாக தமிழை மறந்து ‘டமிலில்’ பாடும் நம்ம வானெ(னொ)லிகளை
அம்னோவின் உண்மையான எண்ணம் கல்வி அமைச்சர் மூலம் வெளியாகிவிட்டது.நாம் பிச்சைக்காரர்கள் போல் அரசாங்கத்தினிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்.மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது.பிய்துதான் எடுக்கவேண்டும்.சுயநல MIC முதலைகளை நம்புவதில் பயனில்லை.சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.