“ரொவெனா, நீங்கள் பெரும்பான்மையோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனச் சொல்வதால் நேர்மையற்ற வழியில் கிடைத்த ஆதாயத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அந்த ரசாக் பகிந்தாவுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்”
இனம் மீது அரசு சாரா அமைப்புடன் ரசாக் பகிந்தாவின் புதல்வி வாக்குவாதம்
விஜய்47: ரொவெனா ரசாக்கின் தகுதிகள் எதுவாக இருந்தாலும் அவரது கேள்வி எனக்குப் புரியவே இல்லை.
பெரும்பான்மையோரைச் சிறுபான்மையோர் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருக்க, பெரும்பான்மையோரை ஆளுவதற்கு சிறுபான்மையோர் எப்போது எங்கு முயற்சி செய்தார்கள் ?
எனக்குத் தெரிந்த வரையில் எல்லா இனங்களையும் பிரதிநிதிக்கும் அரசாங்கத்தை அமைத்து எல்லா இனங்களுக்கும் நன்மை தரும் திட்டங்களை அமலாக்குவது தான் நோக்கமாகும்.
அதே வேளையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் அப்பட்டமான ஊழல், அதிகார அத்துமீறல், பாரபட்சம் ஆகியவை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அம்னோ தலைவர்களுடன் அணுக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதை மட்டுமே தகுதியாகக் கொண்ட நபர்களுக்கு 500 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் கொடுக்கும் நடைமுறையை துடைத்தொழிப்பதும் அதில் அடங்கும்.
ரொவெனா, நீங்கள் பெரும்பான்மையோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனச் சொல்வதால் நேர்மையற்ற வழியில் கிடைத்த ஆதாயத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அந்த ரசாக் பகிந்தாவுக்கும் இந்த நாட்டிலிருந்து திருடிய அவரது கூட்டாளிகளுக்கும் நீங்கள் சொல்ல வேண்டும்
ஏரியஸ்46: சிறுபான்மையோர் பெரும்பான்மையோரைப் பாதுகாக்க வேண்டும் என ஏன் ரொவெனா சொல்கிறார் ? உலகம் முழுவதும் சிறுபான்மையோரைப் பாதுகாக்க பெரும்பான்மையோர் சிறுபான்மையோருக்கு வலிமை ஊட்டுவது தானே வழக்கம்.
அரசமைப்பின் கீழ் நாம் அனைவரும் சமமான குடிமக்கள் தானே ? பிஎன்
பின்பற்றும் இனவாத பிரித்தாளும் போக்கை 13வது பொதுத் தேர்தலில் 51 விழுக்காடு மலேசியர்கள் நிராகரிக்கவில்லையா ?
பெரும்பான்மை இனத்துக்கு எத்தகைய பாதுகாப்பு வேண்டும் என அந்த மாது பிதற்றுகிறார் ? அவர் தமது தந்தை காலத்திய ‘ketuanan’ கால கட்டத்தில் இன்னும் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அப்பும்: நான் நான் ரொவெனாவின் கேள்வியையும் அறிக்கையையும் திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். எனக்குத் தலையும் புரியவில்லை. வாலும் தெரியவில்லை.
அபத்தமாக இருந்தாலும் வெளிப்படையாக அதனை வெளியிடும் துணிச்சலை அவருக்கு அவரது அனைத்துலகக் கல்வி வழங்கியிருக்க வேண்டும். அவருடைய குழப்பத்துக்கு வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நான் அவருக்காக வருந்துகிறேன். இன்னும் இளமையாக இருக்கும் அவர் காலப் போக்கில் முதிர்ச்சி அடைவார் என நம்புவோம். நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தந்தையின் தவறுக்கு அவரைப் பொறுப்பேற்குமாறு செய்யக் கூடாது.
Cantabrigian: அந்த சிறிய விஷயத்தை மலேசியாகினி பெரிய செய்தியாக மாற்றியிருக்கக் கூடாது. அவர் செய்தது தவறு என்றால் நாம் ஏன் அதனை அவரது தந்தையுடன் இணைக்க வேண்டும் ?
அவரது கேள்வி சிலருக்கு முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவரது கருத்திலும் உண்மை உள்ளது. Tindak Malaysia-வின் வடிவமைப்பு அனைத்து மலேசியர்கள் சார்பில் போராடும் அதன் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறதா ?
அந்த அரசு சாரா அமைப்பில் மலேசிய சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆகவே அதனை Tindak Malaysia என அழைக்காமல் Tindak Minoriti எனச் சொல்லலாமே ?
ரொவெனாவைக் கேலி செய்வதால் நாம் அவரை விட புத்திசாலிகளாகி விட மாட்டோம்.
மக்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும் இவர் எப்படி பட்ட அடி மேதாவி என்று . இனி வருங்காலங்களில் இஸ்லாம் அல்லாதவரின் மெல் இந்த இஸ்லாமிய மாணவர்கள் மேல்கல்வி கூடங்களில் எவ்வளவு பாசமாக இருப்பார்கள் என்று . எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவாது ஏன் ?