ஏமாற்றியது மஇகா! ஏமாந்தது இந்திய மாணவர்கள்!

-மு. குலசேகரன், ஜூலை 14, 2013.

 

m-kulasegaranகடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வருட மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கான 1500 இடங்களை பூர்த்தி செய்துவிடுமாறு பிரதமர் கட்டளையிட்டதாக அறிகிறோம்.

 

தேர்தல் முடிந்து ஏறக்குறைய 8 அமைச்சரவைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு இப்பொழுதுதான் முதன் முதலாக இந்திய மாணவர்களுக்கான உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளதா?

 

கடந்த 2 மாதங்களாக நான் இதைப் பற்றி பத்திரிகை வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும் எவ்வளவோ சொல்லியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் குலசேகரன் குழப்பவாதி, கெட்டவன் என்று சொன்ன ..கா இப்பொழுது மீண்டும் அதே பல்லவியை குலசேகரன் பற்றி சொல்லப் போகிறதா?

 

..காவின் இரண்டு முழு அமைச்சர்கள் கடந்த கூட்டங்களில் இது பற்றி பேசவேயில்லை என்பது உண்மைதானே? அதோடு தேர்தலுக்கு முன்பு .இகாவினர் போட்டி போட்டுக்கொண்டு 1500 இடங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னது பொய்யென்பது வேறு நிருபனமாகின்றது.

 

இது அவர்களின் அறியாமையையும், அலட்சியத்தையும் நன்றாகவே வெளிப்படுத்துகிறது. மெட்ரிகுலேசன் இடங்கள் இந்திய மாணவர்களின் எதிர்காலம், சமுதாயத்தின் எதிர்பார்ப்பு என்றெல்லாம் நான் பலமுறை கூறி இருந்தும் இந்த ..கா அமைச்சர்களின் அலட்சியப் போக்கால் நாம் 1500 இடங்ளைப் பெற முடியாமல் போயிற்று. இதை இந்த இந்தியச் சமுதாயம் சும்மா விடக்கூடாது. நமது உரிமையை, நமக்கு ஆற்ற வேண்டிய முக்கியமான கடமையைச் செய்ய தவறவிட்ட இவர்கள் இனிமேல் இருந்தாலென்ன அல்லது இல்லமால் போனாலென்ன ?

 

கட்சித் தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட இவர்கள் கல்விக்கு கொடுக்க முன் வருவதில்லை.

 

இவர்களால் சொந்த பதவியையும் சுகத்தையும்தான் கட்டிக்காக் தெரியுமே தவிர சமுதாயத்திற்கு தேவையான ,அதுவும் மிகவும் முக்கியமான கல்விக்கு எதையுமே செய்ய முடியாது என்பது தெரிந்துவிட்டது.

 

நான் முன்பு சொல்லியதுபோல், பிரதமர் நமது சமுதாயத்தின் மேல் கொண்டுள்ள அக்கறையைக்கூட ..கா தலைவர்கள் சொந்த சமுதாயத்தின் மீது வைத்திராதது கண்டு வேதனை மட்டுமள்ள, வெட்கமும் நாம் அடைய வேண்டும்.

 

இந்தக் கூட்டத்தில், துணப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைதினும் , முதலாவது கல்வி அமைச்சர் இட்ரிசும் கலந்து கொள்ளவில்லயாம்.

 

முக்கியமான இரண்டு அமைச்சர்கள் கலந்து கொள்ளத இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அந்த இருவரும் எவ்வளவு அக்கறையுடன் கவனிப்பார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே பிரதமர் 1,500 இடங்கள் ஒதுக்கப்படும் என்று  கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாத கல்வி அமைச்சர் , இந்த முறை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்ததை நிறவேற்றுவார் என்பதற்கு   என்ன உத்ரவாதம்?

 

அதோடு கல்வி அமைச்சரான முஹைதின், அந்த அமைச்சின்  முடிசூடா மன்னனாக திகழ்வதாலும் ஏற்கனவே மெட்ரிகுலேசன் விடயத்தில் பல பொய்களை சொல்லியிருப்பதாலும், இந்த முறை  அமைச்சரை முடிவை அவர் கவனிப்பார் என்பது சந்தேகத்திற்குறியது.

 

அப்படியே அவர் அதனை செயல்படுத்த முற்பட்டாலும் அதன் உள்நோக்கம் இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இருக்காது. மாறாக அதனைச் சாதகமாக பயன்படுத்தி அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன்தான் அது அமையும் என கூறலாம்.

 

அதற்கேற்றார் போல் காலமும் அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மெட்ரிகுலேசன் துவங்கி 7 வாரங்கள் ஆன படியாலும் , பெரும்பாலான இந்திய மாணவர்கள் வேறு இடம் தேடி சென்றிருப்பார்கள் என்றபடியாலும், இனிமேலும் இடங்கள் கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பதற்கு மாணவர்கள் முன் வருவார்களா என்பது சந்தேகமே!

 

இதனைத் தெரிந்திருக்கும் கல்வி அமைச்சர் இடங்களை உடனடியாக கொடுப்பதாக அறிவித்து தனது சமயோசித புத்தியை இங்கு பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த அறிவிப்பை பெரிதாக்கி சுய விளம்பரம் தேட ..காவின் மாண்புமிகுகள் தாயராகி இருந்தாலும் அதுவும் எதிர்ப்பார்க்கின்ற ஒன்றே!

கல்வித் துணை அமைச்சர் கமலநாதன் சென்ற வாரமே பத்திரிகை நிருபர்களுக்கு காண்பித்ததாக கூறப்பட்ட பட்டியல் என்னவாயிற்று?

 எல்லாமே புருடாவா ?

 ஆக மொத்தத்தில் ஏமாந்து போனது நமது இந்த இந்திய மாணவர்கள்! ஏமாற்றியது ..கா!

 

 

 

TAGS: