பெர்சே 4.0 – அம்பிகா, அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

1ambi‘எனக்கு வயது 72. பெர்சே 3.0ல் நான் என் நண்பர்களுடன் கலந்து கொண்டேன்.  பெர்சே 4.0 நடத்தப்பட்டால் அதிலும் நான் இருப்பேன். மடிவதற்கு அன்றைய  தினம் நல்ல நாளாகும்’

இசி தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணயத்தை தன் விருப்பம் போல செய்ய  முயன்றால் பெர்சே 4.0

சிகியூ மூவார்: நமது பொறுமையை அரசாங்கமும் தேர்தல் ஆணையமும்  சோதிப்பது வெள்ளிடைமலை. எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு என்பதை அவை  உணர வேண்டும். அவை வேண்டுமென்றே நம்மை முலைக்கு விரட்டுகின்றன.

நாம் காரியவாதிகள் என்பதைக் காட்டுவதற்கு நேரம் வந்து விட்டது. மாபெரும்  பேரணியை நடத்துவது தான் நமது செய்தியை வழங்குவதற்கு உள்ள ஒரே வழி.

பெர்சே ஒருங்கிணைப்பாளர் எஸ் அம்பிகாவுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள்.  பிளவுபடாத ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். கௌரவமான,  உண்மையான அனைத்து இனங்களையும் சேர்ந்த மலேசியர்கள் ஒன்று திரண்டு
அந்த பிடிவாதக்காரர்கள் மறக்க முடியாத அளவுக்குப் பாடம் புகட்டுவோம்.

பெர்ட் தான்: அம்பிகா கேட்டுக் கொண்டால் பெர்சே 4.0க்கு என் ஆதரவு நிச்சயம்  உண்டு. பெர்சே கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அது தான் கடைசி  நடவடிக்கை என அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

கடந்த மூன்று பேரணிகளுக்கும் அரசாங்கம் உருப்படியாகப் பதில் சொல்லவில்லை.  ஆகவே மீண்டும் ஊர்வலமாகச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. பேரணி  வழி மக்கள் சக்தியைக் காட்டுவது தான் பிஎன் அரசாங்கத்தின் கவனத்தைப் பெற  முடியும்.

நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை தங்கத் தாம்பாளத்தில்  வைத்துக் கொடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்க முடியாது. காரணம் அந்த  கோரிக்கைகள் எதிர்காலத் தேர்தல்களில் அதன் வாய்ப்புக்களை பாதித்து விடும்.

வெறும் மலேசியன்: பெர்சே அமைப்புக்கு நீங்கள் வழங்கும் சிறந்த
தலைமைத்துவத்திற்கும் உங்கள் துணிச்சலுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
நீங்கள் பெர்சே 4.0க்கு ஏற்பாடு செய்தால் என் குடும்பம் முழுவதும் அங்கு  இருக்கும்.

தூய்மையான வாக்காளர் பட்டியலும் நியாயமான தேர்தல் தொகுதி எல்லை மறு  நிர்ணயமும் ஜனநாயக நடைமுறைக்கு அவசியம் என்பதை 13வது பொதுத்  தேர்தல் முடிவுகள் காட்டி விட்டன.

மாறுவோம்: பெர்சே தலைவர் அம்பிகா சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்  கொள்கிறேன். இளைஞர்களும் முதியவர்களும் பெண்களுமாக எல்லா  மலேசியர்களும் பெர்சே 4.0ல் கலந்து கொள்ள வேண்டும்.

லியூ லியான் குட்: எனக்கு வயது 72. பெர்சே 3.0ல் நான் என் நண்பர்களுடன்  கலந்து கொண்டேன். நான் கண்ணீர் புகை வாசத்தை அறிந்துள்ளேன்.  பங்கேற்பாளர்களை உதைத்த போலீஸ் முரட்டுத் தனத்தையும் நான் பார்தேன்.

பெர்சே 4.0 நடத்தப்பட்டால் அதிலும் நான் இருப்பேன். மடிவதற்கு அன்றைய  தினம் நல்ல நாளாகும். கடந்த 30 ஆண்டுகளாக சேர்ந்து விட்ட அழுக்கைப்  போக்குவதற்கு மலேசிய எழுச்சி நமக்குத் தேவை.

ஒடின்: லியூ லியான் குட், பெர்சே 4.0 நடத்தப்பட்டால் நீங்கள் மடிய மாட்டீர்கள்.  நீங்கள் மடியக் கூடாது.

பல இனம்: மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் நான் பெர்சே 4.0ல் கலந்து  கொள்வேன். அதில் மில்லியன் மக்கள் கலந்து கொள்வதை நாம் உறுதி செய்ய  வேண்டும்.

அனாக் பேராக்: வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது முக்கியம் என்பதை  நான் ஒப்புக் கொள்கிறேன். என்றாலும் தேர்தல் தொகுதி மறுநிர்ணய  நடவடிக்கையில் பெர்சேயும் மற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்களும் பங்கு கொள்வது  அவசியமாகும். இல்லை என்றால் வாக்காளர் பட்டியல் தூய்மையாக இருந்தாலும்  பழைய கதை தான்.

டூட்: நாம் இப்போதே திட்டமிடுவது நல்லது. காரணம் அம்னோ/பிஎன் -னுக்குச்  சாதகமாக தேர்தல் ஆணையம் விதிமுறைகளை இப்போது நிச்சயம் உருவாக்கிக்  கொண்டிருக்கும்.

TAGS: