‘ஒ நஜிப் உங்கள் வலிமை எங்கே போனது ?’

najib-razak c“நஜிப் தீவிரவாதிகள், எஜமானரும் பொம்மலாட்டக்காரருமான மகாதீர்  ஆகியோரது விருப்பங்களுக்கு எதிராக செயல்பட முடியாது. இல்லை என்றால்  அவர் வெளியேற்றப்படுவார்”

எம்பி: ‘கேப்டன்’ எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார்

ஒடின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆழமில்லாதவர், முதுகெலும்பு இல்லாதவர்,  பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றவர் என்பது தான் பிரச்னை.

அவர் தீவிரவாதிகள், எஜமானரும் பொம்மலாட்டக்காரருமான மகாதீர்
ஆகியோரது விருப்பங்களுக்கு எதிராக செயல்பட முடியாது. இல்லை என்றால்  அவர் வரும் அம்னோ தேர்தலில் வெளியேற்றப்படுவார்.

இப்போது அவர் திசை தெரியாமல் தடுமாறுகிறார். எந்தப் பக்கம் சென்றாலும்  அவர் தோல்வி காண்பது திண்ணம்.

விஜய்47: நாம் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம். மாயவித்தைக்காரனைப்  போல இயங்கும் பிரதமர் ஒருவரை நாம் பெற்றுள்ளோம். துணைப் பிரதமரோ  மீட்டரை வாசிப்பவரைப் போன்று இயங்குகிறார். நான் சொல்வது போல பெரிய  மோசமான ஆபத்து.

ஸ்விபெண்டர்: முன்னைய பிரதமர் தூங்கிக் கொண்டே இருப்பார். காணாமலும்  போய் விடுவார். நடப்பு பிரதமர் அமைதியாக இருப்பதோடு காணாமலும் போய்  விடுகிறார்.

நடுநிலை: நஜிப் குழம்பியிருக்கிறார். அவர் சீர்திருத்தங்களைச் செய்ய
விரும்புகிறார். ஆனால் அம்னோ ஆதரவை இழந்து விடுவோமோ என்ற அச்சம்  அவரை வாட்டுகின்றது.

பிரதமர் அவர்களே உங்கள் கோட்பாடுகளில் உறுதியாக இருங்கள். நீங்கள்  செய்வது சரி என்பதை காலம் உணர்த்தும். அதிகாரம் கூடும் போது பொறுப்பும்  அதிகரிக்கிறது.

மலாயா உணர்வு: முதலில் நாம் சில உண்மை நிலைகளை அறிந்து கொள்ள  வேண்டும்:-

முதலாவதாக 13வது பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மையைப் பெறவும் வளமான சிலாங்கூரைக் கைப்பற்றவும் நஜிப் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டார்.

இரண்டாவதாக நஜிப் அந்த இரண்டையும் வழங்கத் தவறி விட்டார். நாட்டை  ஆளும் அதிகாரம் கிடைத்தாலும் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் பிஎன்  தோல்வி கண்டுள்ளது.

மூன்றாவதாக நஜிப், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு இன்னும்  விசுவாசமாக உள்ளவர்கள் உட்பட அம்னோ வலச்சாரி பிரிவுகளின்  தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆகவே “தீயதை பார்ப்பதில்லை, தீயதைப் பேசுவதில்லை, தீயதை கேட்பதில்லை”  என்னும் நிலையை நஜிப் கடைப்பிடிப்பது கண்டு வியப்படைய வேண்டாம். அவர்  கவனமாக இல்லாவிட்டால் அவருக்கு கெடு வைக்கப்பட்டு விடும். (check-mated)

கேபி மேனன்: பிரதமரிடம் நிறையக் கறைகள் இருக்கும் போது இது தான்  உங்களுக்குக் கிடைக்கும்.

தமது அமைச்சர்கள் மீதும் அம்னோ பாரு அரசியல்வாதிகள் மீதும் தமது
வலிமையைக் காட்டுவதற்கான தார்மீக அதிகாரம் அவருக்கு எப்படி வரும் ?

நாட்டைச் சரியான பாதையில் வழி நடத்தி பிரச்னைகளைத் தீர்க்கும் துணிச்சலைக்  கொண்ட பிரதமரே நமக்குத் தேவை. அர்த்தமற்ற அலங்காரப் பேச்சுக்களை  நிகழ்த்துகின்றவர் நமக்கு வேண்டாம்.

சிவிக்: ஆஹா ? நஜிப் ? யார் அவர் ? என்ன பிரதமர் ? நமக்கு ஒருவர்
இருக்கிறாரா ? ஆமாம், ‘சீனர் சுனாமி’ எனச் சொன்னவரா ?.

TAGS: