‘கர்பால் சிங் நாட்டின் ‘அதிபராகி’ விடுவார் எனக் கூறிக் கொள்வதின் மூலம் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கல்வியறிவற்ற கிராமப்புற மலாய்க்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார்.’
பாஸ் வெற்றி பெற்றால் கர்பால் அதிபர் ஆவார் என கோலா பெசுட் மக்களுக்கு கூறப்பட்டுள்ளது
வெறும் பேச்சு வேண்டாம்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது உருமாற்றத் திட்டக் குழுவில் ஒர் அங்கமாக அந்த குருவி மூளையைக் கொண்ட விவசாயத் துணை அமைச்சரை எப்படிச் சேர்த்துக் கொண்டார் ?
கோலா பெசுட் சட்டமன்றத் தொகுதியில் பாஸ் வெற்றி பெற்றால் கர்பால் சிங் நாட்டின் ‘அதிபராகி’ விடுவார் எனக் கூறிக் கொள்வதின் மூலம் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கல்வியறிவற்ற கிராமப்புற மலாய்க்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார்.
தாஜுடின் அவர்களே, இது மாநிலச் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தான். நாடாளுமன்ற தேர்தல் அல்ல. மொத்தமுள்ள 222 இடங்களில் 89 இடங்களை மட்டுமே வைத்துள்ள பக்காத்தான் ராக்யாட் எப்படி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் ?
13வது பொதுத் தேர்தலில் நகரங்களிலும் புற நகர்களிலும் அம்னோ தோல்வி கண்டதில் வியப்பில்லை. ஏனெனில் அங்குள்ள வாக்காளர்கள் விஷயம் தெரிந்தவர்கள். கோலா பெசுட்டில் மலாய் வாக்காளர்களுடைய அறியாமையை பிஎன் பயன்படுத்திக் கொள்கின்றது. அந்த வாக்காளர்கள் உண்மை நிலைக்கும்
கற்பனைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
மஹாஷித்லா: புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றினால் மலேசியா குடியரசாக மாறி கர்பால் அதன் முதல் அதிபராக பொறுப்பேற்பார் என்னும் அந்தக் கதையை அகோங்கும் மலாய் சுல்தான்களும் ஏற்றுக் கொள்கின்றனரா ?
இல்லை என்றால் குறைந்த பட்சம் திரங்கானு சுல்தான் தேர்தல் பிரச்சாரத்தில் தேவையில்லாமல் அரசர் ஆட்சி முறையை இழுத்து வாக்காளர்களைத் தவறாக வழி நடத்தியதற்காக அந்தத் துணை அமைச்சரை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.
சீரழிந்துள்ள அம்னோ அரசியலுக்குள் சிங்கப்பூர் குடியரசு முறையை இழுக்க வேண்டாம் என சிங்கப்பூரும் கௌரவமாக அறிக்கை விட வேண்டும்.
அழைப்பவன்: எல்லா மலாய் ஆட்சியாளர்களுக்கும் எதிராக செயல்பட்டவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆவார். அரச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட விதி விலக்கை அகற்றியவரும் அவர் தான்.
அம்னோ பலவீனமாக இருக்கும் போது அது தான் அரசர்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்கின்றது. அது வலுவாக இருக்கும் போது அரசர்களுடைய அதிகாரங்களை குறைக்கின்றது.
மார்க் அந்தோனி: இந்த நாடு அரசமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி நாடு என்பது அந்தத் துணை அமைச்சருக்குத் தெரியாதா ? இந்த நாட்டின் தலைவராக ஒர் அதிபர் இருக்கவே முடியாது.
அனாக் கெடா: மலேசியாவை மலாய்க்காரர் அல்லாதார் எடுத்துக் கொள்வர் என்ற பாடலை அம்னோ மீண்டும் பாடத் தொடங்கியுள்ளது. உண்மையான பிரச்னைகளை விவாதிக்கும் துணிச்சல் இல்லாத அது மலாய்க்காரர்களுக்கு அச்சமூட்டி அடிபணியச் செய்வதற்கு சில குப்பைகளை அது அவ்வப்போது வெளியிடுகின்றது.
விஜய்47: உண்மையா ! அந்தச் செய்தி நிச்சயம் லிம் கிட் சியாங்கிற்கு ஏமாற்றத்தை அளிக்கும். சீக்கியர்களுக்கு இதை விட வேறு என்ன வேண்டும் ?
சில அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் வெறும் பதவிக்காக மட்டுமே பொறுப்பில் உள்ளவர்கள். அவர்களுக்கு மக்கள் நிலை புரியாது. மற்றவர்கள் மெச்ச வேண்டும் தங்கள் படம் பத்திரிக்கையில் வர வேண்டும் என்பதற்காக எதையும் பேசுவார்கள். இதற்க்கு தக்க சான்று நம்ம பழனியும் கமலநாதனும். எல்லாம் நம்ம தலை எழுத்து.